தீட்சிதர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டமாம்!

- Advertisement -

எப்படி இருக்கிறது நீதி?
சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு
உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையாம்!

புதுடில்லி, நவ. 5- சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்கு நிர்வாகக் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில, கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலை நிர்வகிக்க குழு தேவை என்ற கோரிக்கை உயர் நீதிமன்றம் முன் வைக்கப்படவில்லை. உயர் நீதிமன்றம் முன்பிருந்த பிரச்சினை கனகசபையில் வழிபாடு நடத்துவது தொடர்பாக மட்டுமே என்று தீட்சிதர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் வாதத்தை முன் வைத்தனர்.

இதையடுத்து, கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை, பணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன, கோயில் நிர்வாகக் கணக்கை சரிவர காட்டுவதில்லை, கோயிலின் புராதன குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை என்று அரசுத் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிறுவப்பட்டுள்ள நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பு வெளியானதும் அதை வரவேற்று, சிதம்பரம் கீழவீதியில் பொது தீட்சிதர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *