அர்ச்சகப் பார்ப்பானுக்கு ஆயுள் தண்டனை – உணர்த்துவது என்ன?

2 Min Read
- Advertisement -

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை காட்சிப் பதிவு எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த வழக்கில், கோயில் பார்ப்பன அர்ச்சகர் ஷியாம் பிஹாரி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.1.43 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மதுராவில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தவர் ஷியாம் பிஹாரி. இவர் கோயிலுக்கு வரும் சிறுமிகளுக்கு பிரசாதம் தருவதாகக் கூறி தனி அறைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து காட்சிப் பதிவுகள் செய்துள்ளார். அவற்றை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் சொகுசு பங்களா,  தோட்டம் போன்றவற்றை வாங்கியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் விசாரணையில் தெரிய வந்தது.

உத்தரகாண்டில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராக இருந்த இவர் அங்கேயும் பெண்களை சீண்டியதாகக் கூறி விரட்டி விடப்பட்டுள்ளார். பின்னர் இவர் டில்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள கோயில்களில் அர்ச்சகராகப் பணிபுரிந்து, பின்னர் மதுராவில் உள்ள கோயிலில் நிரந்தர அர்ச்சகரானார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி  அர்ச்சகர் ஜூன் 2025 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மதுரா நீதிமன்றம் அர்ச்சகர் ஷியாம் பிஹாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

‘‘கோயில் என்பது ‘புனித’த்தலம்’’ என்றும், ‘‘கோயில் கருவறையில் இருக்கும் கடவுள் சிலையைக் கும்பிட்டால், அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும்; கடவுள் கடாட்சம் கிடைக்கும்’’ என்றெல்லாம் தலப் புராணங்களை எழுதி வைப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

கோயிலிலும் இரண்டு வகை ஆகம விதிகளை் பயன்படுத்தும் கோயில்கள் என்றும், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்கள் என்றும் தரம் பிரித்து வைத்துள்ளனர். எந்த அடிப்படையில் இதனைப் பார்க்கிறார்கள்?

எந்தக் காலத்திலோ பார்ப்பனர்கள் எழுதி வைத்ததைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

ஆகமக் கோயில்களில் பார்ப்பனர்கள்தான் அர்ச்சகராக முடியும்; ஆச்சார – அனுஷ் டானங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், ஒரே அர்ச்சகப் பார்ப்பனர் சென்ற இடங்களில் எல்லாம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளான். ‘பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட நேரும்’ என்பதுபோல், இப்பொழுது சிக்கிக் கொண்டுள்ளான்; ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளான்.

முறைப்படி ஆகமப் பள்ளிகளில் படித்து, தேர்வில் வெற்றி பெற்ற பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானால் ‘சாமி செத்து விடும்!’ என்று கூக்குரல் போடுகிறார்கள். நீதிமன்றங்களும் ஒத்து ஊதுகின்றன! மனுதர்மம் ஏதோ ஒருவகையில் இன்னும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத்தான் செய்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *