உடல்நலம் குன்றியவர் ரயிலில் எந்த நேரத்திலும் படுக்கையைப் பயன்படுத்தலாம்! உயர் நீதிமன்றம் உத்தரவு

- Advertisement -

சென்னை, நவ. 4- உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் கர்ப்பிணிகள் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதியை எந்த நேரத்திலும் பயன்படுத்த விதிமுறைகள் அனுமதிக்கின்றன என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த எஸ்.பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘உடல்நலம் சரியில்லாத எனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்தபோது, இரவில் மட்டுமே படுக்கையைப் பயன்படுத்த வேண்டும் என்ற ரயில்வேயின் உத்தரவைக் சுட்டிக்காட்டி, என் மனைவி பகல் நேரத்தில் படுக்கையைப் பயன்படுத்த அனு மதி மறுக்கப்பட்டது. எனவே, 2017 ஆம் ஆண்டு ரயில்வே பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதிகளின்
உத்தரவு!

விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

‘‘முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதி என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்த நேரத்திலும் படுக்கையைப் பயன்படுத்தலாம் என்ற விதி முறைகள் ஏற்கெனவே நடை முறையில் உள்ளன. அந்த விதி முறை அமலில் இருக்கும்போது, மனுதாரர் தனக்கான உதவிக்கு ரயிலில் பணியில் இருக்கும் ஊழி யர்களையோ அல்லது ரயில்வே காவல்துறையினரையோ அணுகி யிருக்கலாம். ஆனால், அத்தகைய முயற்சிகள் எதையும் செய்யாமல், ரயில்வே விதிகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்” எனக் கூறி, வழக்கினை முடித்து வைத்த னர்.

மேலும், தனது கோரிக்கை மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மனுதாரர் ரயில்வே நிர்வாகத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தர வில் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *