இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1,688 எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 7/2026
பணி: கமர்சியல் டிக்கெட் எழுத்தர்
காலியிடங்கள்: 700
தகுதி: குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஊதியம்: மாதம் ரூ.21,700
பணி: அக்கவுண்ட்ஸ் எழுத்தர் – தட்டச்சர்
காலியிடங்கள்: 200
ஊதியம்: மாதம் ரூ.19,900
தகுதி: குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பணி: ஜூனியர் எழுத்தர் – தட்டச்சர்
காலியிடங்கள்: 600
ஊதியம்: மாதம் ரூ.19,900
தகுதி: குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பணி: டிரெயின்ஸ் எழுத்தர் (Trains Clerk)
காலியிடங்கள்: 188
தகுதி: குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஊதியம்: மாதம் ரூ.19,900
வயது வரம்பு: 1.1.2027 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
மண்டல வாரியான காலிப்பணியிட விவரங்கள்:
அகமதாபாத்- 26, அஜ்மீர் 1 124, பெங்களூரு – 45, போபால் – 59, புவனேஸ்வர் – 40, பிலாஸ்பூர் – 20, சண்டிகர் – 78, சென்னை – 168, கோரக்பூர் – 72, குவஹாத்தி – 49, ஜம்மு-சிறீநகர் – 51, கொல்கத்தா – 329, மால்டா – 23, மும்பை – 140, முசாஃபர்பூர் – 7, பாட்னா – 43, பிரயாக்ராஜ் – 149, ராஞ்சி – 75, செகந்திராபாத் – 72, சிலிகுரி – 43, திருவனந்தபுரம் – 75
தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சு திறன், கணினியில் பணிபுரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பிளஸ் 2 தரத்தில் கேள்விகள் இருக்கும்.
இணைய வழி எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்டத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள், இடம் பற்றிய விவரங்கள் இ-நுழைவுச் சீட்டுமூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.500. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ,250. கட்டணத்தை இணைய வழி முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrb.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2026
