தேனி சிறைக் கைதிகளுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் சித்ரவதையா? விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 4- தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் அவர் களுக்கு முறையான உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டனரா என்பது குறித்து விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்களுக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தர விட்டுள்ளார்.

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு கடலூர், மதுரை, சேலம், நெல்லை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தப்பிய கைதிகளில் ஒருவர் தங்களுக்கு தேனி சிறையில் முறையான உணவு, குடிநீர் வழங்காமல் அடித்து சித்ரவதை செய்ததால்தான் தப்பிச் சென்றதாக காட்சிப் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தப்பிய 17 கைதிகளும் தேனி சிறையில் முறையான உணவு, குடிநீர் வசதி வழங்கப்படாமல், அடித்து துன்புறுத்தப்பட்டார்களா என்பது குறித்து தேனி, மதுரை, கடலூர், சேலம், நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர்களான மாவட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 17 பேரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தர விட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரின் உத்தரவுப்படி நடத்தப்படும் இந்த விசாரணையின் போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்கள் சம்பந்தப்பட்ட 17 பேரையும் நேரில் சந்தித்து விசாரிக்க வேண்டும்.

அப்போது சிறை அதிகாரிகள் யாரும் உடன் இருக்க அனுமதிக்கக் கூடாது.

ஒருவேளை அந்த கைதிகள் கூறுவது உண்மையாக இருந்தால் அதற்கு காரணமான வர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.

தப்பிச்சென்று மீண்டும் கைது செய்யப்பட்ட போதும் அவர்கள் அடித்து சித்ரவதை செய்யப் பட்டார்களா என்பது குறித்தும், அவர்களின் உடலில் காயங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர்கள் வரும் நவ.16-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *