ஜே.இ.இ., நீட் வகுப்புகளுக்கான பயிற்சி மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய உத்தரவு

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 4- மாணவர்கள் பயிற்சித்தாள் வினாக்கள் மூலம் உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் நோக்கங்களைச் சிறப்பாக அடையவும் இயலும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித் துள்ளது.

2026-2027ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில், 13.06.2026 முதல் வாரந்தோறும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு வெற்றிப் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சார்ந்த பாடவாரியான பயிற்சிகள், பயிற்சித் தாள்கள், மாதிரித் தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் தேர்வு உத்திகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளை முறையாகப் பயிற்சி செய்து, அவற்றில் எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை மாணவர்கள் சார்ந்த பள்ளி அளவிலேயே உறுதி செய்திடல் அவசியமாகிறது.

எனவே, வெற்றிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் விருப்பமுள்ள மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை அன்றாடம் மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாணவர்கள் பயிற்சித் தாள் வினாக்கள் மற்றும் அதனைச் சார்ந்து எழும் அய்யங்களைத் தீர்க்கவும், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்யவும், மணற்கேணி செயலி போன்ற இணையவழி கற்றல் வளங்களைப் பயன்படுத்தவும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முழுமையாக பயன்படுத்தப்படுவதை தலைமையாசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான தங்களது தயாரிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் நோக்கங்களைச் சிறப்பாக அடையவும் இயலும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை அனைத்து தலைமையாசிரியர்களும் தவறாது செயல்படுத்துவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *