டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு விண்ணப்பிக்க நாளை (நவ. 5) கடைசி நாள் இதுவரை 9.80 லட்சம் பேர் மனு!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 4- தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கான இணையவழி விண்ணப்பதிவு அன்றைய நாளே தொடங்கிய நிலையில், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டவர்கள் மட்டுமின்றி, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் இப்பணிக்காக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இத்தேர்வுக்கு 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய கால அவகாசம் நாளை வியாழக்கிழமையுடன் (நவம்பர் 5) நிறைவடைகிறது. குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் நவம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாத இறுதிக்குள் முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் உண்ணாநிலைப் போராட்டம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

சேலம், நவ. 4- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், சேலத்தில் நேற்று (3.11.2026) நடந்தது. மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுந்தரம் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, பயிர்க்கடனை அரசு முழுமையாக தள்ளுபடி செய்யாதது தொடர்பாகவும், அடுத்தக்கட்டமாக எத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், மாநிலத்தலைவர் சின்னசாமி செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு அங்கீகாரம் இல்லாத விவசாய சங்கங்களை அழைத்து பேசி பயிர்க்கடன் தள்ளுபடி 75 ஆயிரம் ரூபாய் என முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இம்மாத இறுதிக்குள் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால், மாநிலம் தழுவிய உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிசம்பர் 21ஆம் தேதி நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் அருகில் அனைத்து விவசாயிகளையும் திரட்டி உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவோம். அரசு எங்களை அழைத்து பேசினால், கோரிக்கைகளை தெரிவிப்போம். ஆனால் அரசு, விவசாயிகளை பிரிக்கும் சூழ்ச்சியை செய்கிறது. இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *