கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.11.2026

3 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அமைச்சர் மீது லஞ்சப் புகார் – ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரும் திமுக! ரூ.5 கோடி லஞ்சம் வழங்க முன் வந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக, அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி ஆகியோர் மீது விசாரணை நடத்த திமுக சட்டப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. லஞ்சம் கொடுக்க முன் வந்ததே தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்டு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* விமானக் கட்டணம் 700% உயர்ந்தால் விமானத்தில் பயணிக்காதீர்கள்! – உச்சநீதிமன்றம் கருத்து. ஜனவரி முதல் விமானக் கட்டணம் சுமார் 700% உயர்ந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. விழாக் காலங்களில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்வதை கண்டித்த நீதிமன்றம், விமானக் கட்டண ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பதிலளிக்க உத்தரவிட்டது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வெளிநாட்டு உதவியுடன் பிரதமர் மோடி ஆட்சியில் நீடிக்கிறார்! – ராகுல் காந்தி சவால். எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு உதவியுடன் நாட்டை சீர்குலைக்க முயல்வதாக மோடி குற்றம் சாட்டிய நிலையில், பிரதமர் வெளிநாட்டு ஆதரவுடன் ஆட்சியில் நீடிப்பதாக ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார். பிரதமரின் அரசியல் மற்றும் நிதி ஆதாரங்கள் வெளிநாட்டு ஆதரவை சார்ந்துள்ளனவா என்பது குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு மோடிக்கு ராகுல் சவால் விடுத்தார்.

* சோனியா காந்தி – லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு; அயக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கால நினைவுகள்! டில்லியில் லாலு பிரசாத் யாதவை சந்தித்த சோனியா காந்தி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA), தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இருவரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

* வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் – 5 மாநிலங்களில் 13.24% வாக்காளர்கள் குறைவு!  உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய அய்ந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) பிறகு 13.24% வாக்காளர்கள் குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன. வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்களுக்கு இடையே சுமார் 1.94 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; உத்தரப் பிரதேசத்தில் மட்டும் மிக அதிக அளவில் வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*கேரளாவில் பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைக்கான போராட்டம் வெற்றி! கள்ளுக்கடைகளில் பெண்கள் பணியாற்றத் தடை விதித்த சட்டப்பிரிவை சமத்துவத்திற்கு எதிரானது எனக் கூறி கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு அதே தொழிலில் வேலை கோரிப் போராடிய 49 வயது சோபி குஞ்சு பாலுவுக்கு இந்தத் தீர்ப்பு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி இந்து:

* பீகாரில் சுயேச்சை எம்.எல்.சி.க்கள் பாஜகவில் இணைந்த விவகாரம் – அய்க்கிய ஜனதா தளம் கேள்வி! இரு சுயேச்சை சட்ட மேலவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படும் விவகாரத்தில், கூட்டணிக் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் (JD(U)), பாஜகவிடம் விளக்கம் கோரியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அயோத்தி ராமன் கோயில் நன்கொடை மோசடி – 8 பேர் மீது விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! ராமன் கோயில் நன்கொடையில் ரூ.2.7 கோடி கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு எதிராக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *