தமிழ்நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.11 உயர்வு!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ.1 பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், நடப்பு மாதத்திற்கான புதிய விலை நிலவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி (LPG) உருள விலை ரூ.11 உயர்ந்து, ரூ.3,016.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயுஉருைளை விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து ரூ.957.50 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய மேற்காசியப் போர் காரணமாக, பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதன் தாக்கம் உலகளாவிய எரிபொருள் சந்தையிலும் எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, எரிபொருள் விலையில் சற்று தளர்வு ஏற்பட்டது. இதன் பலனாக, ஜூலை மாதத்தில் ரூ.183.50-ம், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.192-ம் என வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டது.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்ததால் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியன்று வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ.66.50 உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பு மாதத்திலும் மேலும் ரூ.11 அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *