தேனி சிறை உடைப்பு: பொறுப்பு கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம்

- Advertisement -

தேனி, நவ. 1- தேனி மாவட்டச் சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில், சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி யில் 334 கைதிகள் அடைப்புக்கு உரிய வசதியுடன் செயல்பட்டு வரும் தேனி மாவட்டச் சிறையில், கடந்த 28.10.2026 அன்று இரவு 10 மணியளவில் 3-ஆம் அறையில் அடைக்கப்பட்டிருந்த விசா ரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டது போல் சக கைதிகள் நாடகமாடியுள்ளனர்.

இதை நம்பி அறைக்குச் சென்ற சிறைக் காவலர் ஸ்டாலின் பிரபுவை, முத்து இளங்கோவன் உட்பட 17 கைதிகள் திடீரெனத் தாக்கினர். தொடர்ந்து, நுழைவு வாயிலில் இருந்த காவலர் தங்கபாண்டியையும் தாக்கி, அவரிடமிருந்த சாவியைப் பறித்துக் கொண்டு 17 கைதிகளும் சிறையை விட்டுத் தப்பியோடினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில் 43 மணி நேரத்திற்குள் 15 கைதிகள் கைது செய்யப் பட்டனர்; எஞ்சிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்தச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட லிங்க பிரசாத் உள் ளிட்ட 3 கைதிகள் உடனடியாக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி ஏற்கெனவே 9 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டி ருந்தனர்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்கும் வகையில் தேனி சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் நாகேஸ்வரனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இச்சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப் பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *