அல்லித்துறை, நவ. 1- ஒய்எம்சிஏ, நாகமங்கலம் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை, மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை, யுனிவர்ஸ் பல் மருத்துவமனை, மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையின் தேசிய காசநோய் ஒழிப்புத் துறை, பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி ஆகியவை இணைந்து 31.10.2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இலவச பொது மருத்துவம், மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய், கண், பல் மற்றும் காசநோய் பரிசோதனையினை அல்லித் துறை கிராமம் சி.எஸ்.அய். துவக்கப்பள்ளியில் பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம் நடத்தியது.
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் வழிகாட்டுதலில் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் சி.எஸ்.அய் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் ரீதா முன்னிலையில் Young Men’s Christian Association பொதுச் செயலாளர் ஜோஸ்வா ரெக்ஸ் இம்மாபெரும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

ஒய்எம்சிஏ துணைத் தலைவர் ஞானபிரகாசம் வரவேற்புரையுடன் தொடங்கிய இம்மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் Dr. முனவர் சுல்தானா தலை மையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 121 பேர், ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் பெண்கள் நல மய்ய மருத்துவர் Dr. சுகிர்தா தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் 51 பேர், மேக்ஸி விஷன் கண் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் பூவரசி, ஷர்மிளா மற்றும் காவியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 74 பேர், யுனிவர்ஸ் பல் மருத்துவமனையின் பல் மருத்துவர் பாலமுரளி தலைமையில் நடைபெற்ற பல் பரிசோதனையில் 22 பேர், மகாத்மா காந்தி நினைவு அரசு பொதுமருத்துவமனையின் தேசிய காசநோய் ஒழிப்புத் துறையின் வட்டார மேற்பார் வையாளர் திருமதி ஜீவா மற்றும் எக்ஸ்ரே தொழில்நுட்பநர் அல்போன்ஸ் ஆகிய மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற காசநோய் பரிசோத னையில் 55 பேர் என மொத்தம் 121 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. தினேஷ், விரிவுரையாளர் திருமதி சாந்தகுமாரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவப் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். மேலும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் செவிலியர் காமாட்சி மற்றும் செவிலிய மாணவிகள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இம்மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் அலுவலர் செல்வி நற்றிணை, YMCA மற்றும் பெரியார் மருத் துவக் குழுமம் சிறப்பாக செய் திருந்தது குறிப்பிடத்தக்கது.
