27 இந்திய மாலுமிகளோடு சென்ற கப்பல் மீது நடுக்கடலில் கண்ணிவெடி தாக்குதல்! ஹார்மூஸ் நீரிணையில் பரபரப்பு

3 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 1- உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்மூஸ் நீரிணையில், இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

இதில் கப்பலின் எஞ்சின் அறை தீப்பற்றிய நிலையில், அதிலிருந்த 27 இந்திய மாலுமி களும் காயமின்றி உயிர் தப்பினர். ஹார்மூஸில் தொடரும் இது போன்ற தாக்குதல்களால் பதற் றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. பன்னாட்டு கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஹார்மூஸ் நீரிணை மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பனனாட்டு கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5இல் ஒரு பகுதி இங்கு தான் நடைபெறுகிறது.

ஹார்மூஸ் நீரிணை

ஹார்மூஸ் நீரிணையில் தாக்குதலை முழுமையாக நிறுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட இதுவரை அதற்கு பலனில்லை. இதற்கிடையே ஹார்மூஸ் நீரிணையில்.. இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற எட்டி லூயிஸ் 1 (MT LOUISE 1) என்ற கப்பலின் அடிப்பகுதியில் சிறிய படகு மூலம் இரண்டு கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பற்றிய நிலையில், அதிலிருந்த 27 இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இதே பகுதியில் மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் போர் ஆரம்பித்த பிறகு கண்ணி வெடி மூலம் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அடுத்தடுத்து தாக்குதல்

இன்றைய தினம் இந்திய மாலுமிகள் இருந்த எம்.டி. லூயிஸ் (MT LOUISE 1) கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, நேற்றைய தினம் அக்டோபர் 29ஆம் தேதி, லைபீரியா நாட்டு கொடியுடன் சென்ற எம்.டி. அர்சானா (MT ARZANAH) என்ற மிக பெரிய கச்சா எண்ணெய் கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இரண்டு இந்தியர்கள் இருந்தனர்.

இரண்டு கப்பல்களிலும் சேர்த்து மொத்தம் 29 இந்தியர்கள் பயணம் செய்து உள்ளனர். நல்வாய்ப்பாக இந்த இரு தாக்குதல்களிலும் இந்தியர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இந்தியர்கள் அனை வரும் பாதுகாப்பாக இருப்பதாக ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இந்திய மாலுமிகளின் பாது காப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்..

என்ன நடந்தது

சிறிய படகில் வந்த மர்ம நபர்கள் எம்.டி. லூயிஸ் 1 கப்பலின் அடிப்பகுதியில் இரண்டு லிம்பெட் கண்ணி வெடிகளைப் பொருத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து எஞ்சின் அறையில் தீப்பற்றியது. கப்பலில் இருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் கப்பல் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. அதேநேரம் இதனால் கடலில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஓமனின் கசாப் நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக பிரிட்டிஷ் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

பின்னணியில் யார்?

கப்பல்களின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் லிம்பெட் கண்ணிவெடிகள் குறைந்த செலவில் தயாரிக்கக்கூடியவை என்றும், சிறிய படகுகள் மூல மாகவே அவற்றை பயன்படுத்த முடியும் என்றும் கடல்சார் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதலே இந்த பகுதியில் இதுபோன்ற வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இதேபோன்ற தாக்குதல் முயற்சி நடந்தது. இருப்பினும், அப்போது கப்பலில் பொருத்தப்பட்ட வெடி குண்டுகள் வெடிக்காததால் பாதிப்பு ஏற்படவில்லை. ஹார்மூஸில் பதற்றம் தணியாமல் தொடர்ந்து இதுபோல தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இது பன்னாட்டு வணிக கப்பல்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக் கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *