திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரின் தங்கை மாமனாரும், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் நமது தோழரும், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டச் செயல்பாட்டாளருமான பொறியாளர் மு.கிருபாசங்கர் அவர்களின் தந்தையாருமான ஜலகண்டபுரம் அ. முருகேசன் (வயது 75) அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக, சேலத்தில் நேற்றுமுன்தினம் (29.10.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவர்தம் வாழ்விணையர் வசந்தரா, மருமகள் பிரின்சசு பேராண்டாளு மங்கை, பேரன் புத்தன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
31.10.2026
