‘இண்டியா’ கூட்டணி ராம்லீலா போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவு! அபிஜித் தீப்கே அறிவிப்பு

- Advertisement -

புதுடில்லி, அக். 31-  டில்லியில் ‘இண்டியா’ கூட்டணி  போராட் டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவளித்துள்ளது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை எதிர்க்கும் இந்தப் போராட்டம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டில்லியின் ராம்லீலா மைதானத்தில் ‘இண்டியா’ கூட்டணி போராட்டம் நடத்துகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை (எஸ்அய்ஆர்) மறுஆய்வு செய்வதற்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இப்போராட்டத்திற்கு, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே ஆதரவை தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது கட்சியின் தலைவர்கள் ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வார்களா என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. முன்னதாக, வேலைவாய்ப்புத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம்நடத்தியது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளு மன்ற எம்பிக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ‘இண்டியா’ கூட் டணியின் போராட்டம் மீது தனது எக்ஸ் தளத்தில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே பதிவிட்டுள்ளார்.

அதில், ஞானு (ஞானேஷ்குமார்) பதவி விலக வேண்டும். எங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இண்டியா கூட்டணியின் ‘நவம்பர் 1’ பேரணிக்கு ஆதரவை வழங்குகிறது. தேசமே முதன்மையானது.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நம்பிக்கையை ஞானேஷ்குமார் இழந்துவிட்டார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையையும் சுதந்திரமான தன்மையையும் மீட்டெடுக்க, அவர் பதவி விலகுவது அவசியம்.

எஸ்அய்ஆர் செயல்முறை, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலி லிருந்து நீக்கப்படுவது கவலைகளை எழுப்பியுள்ளது. குடிமக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதற்குப் பதிலாக, தங்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சமூக அல்லது பொருளாதார அந்தஸ்து எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு இந்தியருக்கும் சமமான அரசியல் குரல் இருப்பதை உறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் போராடினார். ஒவ்வொரு அரசாங்கமும் அரசியலமைப்பு நிறுவனமும் இந்தக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். மாறாக, அவர்களின் வாக்குப்பதிவுச் செயல்பாட்டில் தடைகளை உருவாக்குவது அல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் இந்த உரிமையிலிருந்து தவறாமல் இருப்பதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும். எனவே, நம் நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் சிஜேபி ஆதரவளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *