சென்னை, அக்.31- சட்டமன்ற தி.மு.க. மேனாள் உறுப்பினரும், நெருக்கடி நிலை காலத்தில் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவரும், சென்னை மாவட்ட தி.மு.க.வில் பல பொறுப்பு களில் இருந்தவருமான மிசா சோ.மா.இராமச் சந்திரன் (வயது 101) நேற்று (30.10.2026) மதியம் 1.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நேற்று (30.10.2026) இரவு 8 மணிக்கு சென்னை, அமைந்தகரை, மசூதி தெருவில் உள்ள இல்லத் தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண் டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்டக் கழகக் காப் பாளர் கி.இராமலிங்கம், இளைஞரணிச் செயலாளர் பா.பார்த்திபன், அரும்பாக் கம் சா.தாமோதரன், கழகப் பொதுக் குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராசு, ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை.க.தமிழ்ச்செல்வன், இரா.அருள், பகுதி தி.மு.க. வழக்குரைஞரணிப் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர்கள் திவாகர், மதன் உள்ளிட்டத் தோழர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
இன்று (31.10.2026) காலை 10 மணிக்கு அமைந்தகரை இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப் பட்டு, அரும்பாக்கம் இடு காட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
