மறைவு

- Advertisement -

சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் இராச.செல்வராஜ் 29.10.2026 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

நேற்று (30.10.2026) மாலை 4 மணிக்கு இறுதி நிகழ்வு  நடைபெற்றது. மொழிப் பேராட்டத்தில் கலந்து கொண்டவர். தீவிர முரட்டு சுயமரியாதைக்காரர். அனகாபுத்தூரின் முதல் பெரியார் பெருந்தொண்டர். பெரியார் பிஞ்சுகள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சியிலும் தலைமை தாங்கி நடத்தி வைத்த சிறப்புக்குரியவர்.

முகவரி: 8. முதல் தெரு கஸ்தூரி பாய் நகர் அனகாபுத்தூர் சென்னை 70. தொடர்பு எண்: சண்.சரவணன் – 9380008037.

– – – – –

மறைவு

காரைக்குடி கழக மாவட்டம், சாக்கோட்டை ஒன்றிய கழக மேனாள் தலைவர் க.கார்மேகம் (வயது 75) உடல்நலக்குறைவு காரணமாக கோட்டையூர் வேலங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் 29.10.2026 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

செய்தியறிந்து காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, கோட்டையூர் நகர மேனாள் தி.மு.க. செயலாளர் சீரிய பகுத்தறிவாளர் நாத்திகம் இராமசாமி,  பள்ளத்தூர் பேரூர் கழக நிர்வாகி டைலர் ராஜசேகர், வேலங்குடி பகுத்தறிவாளர் கழக நிர்வாகி சீ.மணிவண்ணன், சீ.செல்வமணி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். மறைந்த கார்மேகம் கழகத்தின் கிராமப்பிரச்சாரக் கூட்டங்களை தனது ஒன்றியத்தில் சிறப்பாக நடத்தி அனைவருக்கும் நாள் முழுவதும் உணவளித்து சிறப்பு செய்தவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *