சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

- Advertisement -

சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் நவம்பர் மாதக் கூட்டம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, விடுதலை நகர், எஸ். கொளத்தூர், கோவிலம்பாக்கம், தந்தை பெரியார் நூலகத்தில் நடைபெறுகிறது.

பொதுக்குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன் தலைமையில், நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ், பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், புலவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார்.

14.11.2026 அன்று நடைபெறவுள்ள வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களின் சிறப்புக் கூட்ட ஏற்பாடுகள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு மலரில் மாவட்டக் கழகத்தின் சார்பில் விளம்பரம் வெளியிடுதல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

வரவேற்புரை: ஆர். கலைச்செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் – நன்றியுரை: க. தமிழினியன், மாவட்டச் செயலாளர்  – அழைப்பு: வேலூர் பாண்டு, மாவட்டத் தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *