சென்னை, அக். 31- ஆதிதிராவிடர் களின் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் www.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம் அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகியும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தங்களது தொண்டுகள், சாதனைகள் தொடர்பான ஆவணங்கள், சான்றுகளை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.9-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Leave a Comment
