செர்பியாவில் வரலாற்றுச் சாதனை! மாணவர் புரட்சியால் கிடைத்த சுதந்திரம்!

3 Min Read
- Advertisement -

செர்பியத் தலைநகர் பெல்கிரேடின் தெருக்களில் இன்று “செர்பியா இப்போது சுதந்திரமானது” என்ற முழக்கம் எதிரொலித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த அதிபர் அலெக்சாண்டர் வுச்சிச்சின் ஆட்சியை, நாட்டின் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய வீரியமிக்க போராட்டத்தின் மூலம் வீழ்த்தியுள்ளனர்.

போராட்டத்தின் தொடக்கம்

2024 நவம்பர் மாதம், செர்பியாவின் நோவிசாத் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 16 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து அரசில் மலிந்து கிடந்த ஊழலின் வெளிப்பாடாகக் கருதப்பட்டு, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ஊழலுக்கு எதிராகத் தெருக்களில் வெடித்த மக்கள் போராட்டமே மாணவர் இயக்கமான “ஸ்டூடண்ட் லிஸ்ட் மூவ்மென்ட்” உருவாகக் காரணமானது.

கொள்கைகளைத் தாண்டிய கூட்டணி

மாணவர்கள் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கி, பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டனர். இதில் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட அமைப்புகளும், அய்ரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்புபவர்கள் மற்றும் ரஷ்யாவுடன் ஆதரவாகச் செயல்பட விரும்புபவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைக்கப்பட்டனர்.

நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவித்து, அவற்றின் நடுநிலைமை யையும், சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதே மாணவர்களின் முக்கிய இலக்காக இருந்தது. இது குறித்து நாடு முழுவதும் விரிவான விவாதங்களை மாணவர்கள் முன்னெடுத்தனர்.

மாணவர்களின் 11 திட்டங்களும் முக்கிய முழக்கங்களும்

மாணவர்கள் நாட்டின் நலனுக்காக 11 திட்டங்களை வகுத்தனர். அவர்களின் முதன்மையான முழக்கங்கள்:

  1. “செர்பியா வேண்டுமா அல்லது மாபியா வேண்டுமா?”
  2. “அறிவே சக்தி, தகவலே சக்தி” – இதன் கீழ் பத்திரிகை சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்றும், அரசுத் தொலைக்காட்சி அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

தலைவரில்லா இயக்கம் மற்றும் ‘ப்ளீனம்’ முறை

அரசாங்கம் தனிநபர் ஒருவரையோ, இருவரையோ இலக்கு வைத்து கைது செய்வதைத் தவிர்க்க, இந்த மாணவர் இயக்கத்திற்குத் தனியாக எந்த ஒரு தலைவரும் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் பல்கலைக்கழகங்களை முற்றுகையிட்டு வளாகத்திலேயே தங்கிப் போராட்டத்தை நடத்தினர். ஜனநாயகத்தில் மக்களின் நேரடிப் பங்கேற்பை ஊக்குவிக்க “ப்ளீனம்” (Plenum) எனப்படும் மக்கள் அமைப்பு களை உருவாக்கினர்:

ப்ளீனம் கூட்டங்களில் மாணவர்கள் ஜனநாயக முறையில் விவாதங்களை நடத்தி முடிவுகளை எடுத்தனர். தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, பல்கலைக்கழக அவைகளில் விவாதிக்கப்பட்டு வாக்களிப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கு ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தப் பயிற்சிக் கையேடுகளும் விநியோகிக்கப்பட்டன.

ப்ளீனம் வழிமுறை மெதுவானது என்றாலும், செர்பியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுவே சரியான பாதை என்பதை உணர்ந்து, மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் உறுதியுடன் இந்தப் பாதையில் பயணித்தனர்.

அவதூறுகளும் தெளிவான பதிலும்

இந்தியாவில் கரப்பான் பூச்சிகளைப் போல (எங்கும் பரவியிருப்பதாக) மாணவர்களைப் பற்றிப் பேசி, “இவர் களுக்குச் சொந்த அரசியல் சுயலாபம் உள்ளது; தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்கள்” என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கினர். ஆனால் மாணவர்கள், “நாங்கள் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட மாட்டோம்; தற்போதைய எந்தக் கட்சியிலிருந்தும் எந்த மாணவரும் வேட்பாளராக நிற்க மாட்டார்” என்று தெளிவாக அறிவித்தனர்.

வரலாற்றுத் தேர்தல் வெற்றி

செர்பிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன. நாட்டின் 80 பல்கலைக்கழகங்களிலிருந்து சுமார் 300 வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 250 வேட்பாளர்கள் களமிறக்கப் பட்டனர். அதில் ‘ஸ்டூடண்ட் பிளாக்கேட்’ சார்பில் நிறுத்தப்பட்ட 160 வேட்பாளர் களும் பிஎச்டி பட்டம் பெற்ற தகுதியானவர்கள். இந்தத் தேர்தலில் மாணவர்கள் கூட்டணி 140 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *