சென்னை அக். 30– மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு உதவி உபகரணம் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் நவீன ஏஅய் உதவி உபகரணங்கள் வாங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான உதவிக் கருவிகள் வழங்கிடும் திட்டத்தின் கீழ் வராத, அதிநவீன ஏஅய் தொழில் நுட்பம் சார்ந்த உதவி சாதனங்களை வாங்குவ தற்கு, சாதனங்களின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000 வரை நிதி உதவி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் 1000 பேருக்கு இந்த திட்டம் செயல் படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த பயனாளிகள் விளையாட்டுக்கான பிரத்யேக செயற்கைக் கால்கள் (Sports prosthetic legs), தசை மின் சமிக்ஞை மூலம் இயங்கும் செயற்கைக் கைகள் (Myoelectric signal operated upper limb prostheses), காக்லியர் இம்ப்ளான்ட் பேட்டரிகள் (Cochlear implant batteries) மற்றும் இதர உயர்தர நவீன AI தொழில்நுட்ப உதவி சாதனங்களை வாங்கிக் கொள்ள முடியும்.
மாற்றுத்திறனாளிகளும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் நவீன ஏஅய் உதவி உபகரணங்கள் வாங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
