அதிக மின் கட்டணத்தை எதிர்த்து வழக்கு! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 29- தமிழ்நாட்டில் அதிக மின் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த காமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் 100 யூனிட் இலவச மின்சாரத்தை, 200 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு பிறப்பித்த பின், கடந்த ஒன்றரை மாதங்களாக மின் கட்டணம், முந்தைய பில்லை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளது. இது சம்பந்தமாக ஒன்றரை லட்சம் பேர் வரை புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம், தொடர்ந்து அதிகக் கட்டணங்களை விதித்து வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன் 2000 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கட்டணம் விதிப்பதில் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குழு ஒன்றை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். பழைய கட்டண நிர்ணய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, பொது நல வழக்காக உள்ளதாகக் கூறி, மனுவை தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட பதிவுத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *