பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 28- ‘பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என, ஒன்றிய அமைச்சகங்களின் செயலர்கள், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநில தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் கூறியிருப்பதாவது:

பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு

நாட்டில் பெண்களின் உரிமையை பாது காக்க, கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தாலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும், அவர்களுக்கான பாதுகாப்பு, பெரும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. நம் நாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட, காலமுறை தொழிலாளர் பங்களிப்பு ஆய்வின்படி, 2026 செப்டம்பரில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு, 34.6 சதவீதமாக இருந்தது. அதேநேரம், தேசிய குற்ற ஆவண காப்ப கத்தின், 2026 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 4.4 லட்சத்தை எட்டியுள்ளது.

அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன!

இந்த புள்ளி விபரங்கள், பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடு வதில், இன்றும் நீடிக்கும் பெரும் சவால்களை தெளிவாகக் காட்டுகின்றன. அரசியலமைப்புச் சட்டம், பெண்களுக்கு வழங்கியுள்ள நீதி மற்றும் சம வாய்ப்புகளை, முழுமையாக உறுதிப்படுத்த, அவர்களின் பாதுகாப்பே முதன்மையானது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *