சென்னை, ஆக. 5- இன்று (5.8.2026) காலை 10 மணியளவில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் த.வெ.க. அரசின் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ.மரியவில்சன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து பேசுகையில்:-
தந்தை பெரியார் கொள்கைத் தலைவராக ஏற்றவர் நமது முதலமைச்சர் அவர்கள். சமூகநீதியை உணர்வுபூர்வமாக ஏற்றவர்.
அதனால்தான் அவரின் தலைமையிலான நமது அரசானது தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதில் உறுதியுடன் உள்ளது. தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளில்…
நம்முடைய கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்து, மாணவர் களின் வயிற்றுப் பசியை மட்டுமின்றி கல்விப் பசியையும் போக்கினார்.
நமது முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் ‘காமராசர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் சூட்டி பெருந்தலைவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் விரிவுபடுத்தி உள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு திருத்த வரவு – செலவு மதிப்பீடுகளில் 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்படுகிறது. ரூ.5,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு.. பெண்கள் முதல் மாணவர்கள் வரை! தவெக நிதிநிலை அறிக்கையின் 20 முக்கிய அறிவிப்புகள் –
அரசுப் பள்ளிகளில் க்ளீன்,
சூப்பர் கேம்பஸ் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள 10,000 அரசுப் பள்ளிகளில் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்த ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் தூய்மை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பள்ளிப் பாடத்திட்ட மறுசீரமைப்பு
தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கல்வி வெளிப்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பெருந்தலைவர் காமராஜர்
சிறப்புப் பள்ளிகள்
மாணவர்களுக்கு சிறப்பான கல்விச் சூழலை உருவாக்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இலவச கல்வி உதவி செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கல்
அரசுப் பள்ளிகளில் அன்றாடம் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்வதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
