‘வந்தே மாதரம்’ பாடலின் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து மனுக்கள் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

- Advertisement -

புதுடில்லி, அக்.28 அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்தி களையும் முழுமையாகப் பாட வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதில ளிக்க, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழுப் பாடலையும் கட்டாயமாக்கியது இஸ்லாமிய வெறுப்பு என்று பவுத்த சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுமீதும், இதன் முழுபதிப்பு ஒரு மதப் போர் பாடல் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த மனுமீதும் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு தாக்கீது இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதி பதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு அனுப்பியுள்ளது,

சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 79 ஆண்டுகளாக இயற்கையை மட்டுமே போற்றும் முதல் 2 சரணங்கள் மட்டுமே தேசியப் பாடல் அந்தஸ்தில் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆறு பத்திகள் கொண்ட முழு பாடலையும் பாடுமாறு குடிமக்களைக் கட்டாயப்படுத்துவது தேசிய சகோதரத்துவத்தைப் பாதிக்கிறது என்றும், வகுப்புவாதப் பிளவுகளை ஆழப்படுத்துகிறது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்பட்ட இரண்டு உள்துறை அமைச்சக அரசாணைகளையும் அரசியல மைப்புச் சட்டத்துக்கு விரோத மானவை மற்றும் செல்லாதவை எனக் கூறி ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் தனது பதிலை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.

‘வந்தே மாதரம்’ கட்டாய உத்தரவை எதிர்த்த அனைத்து மனுக்கள்மீதான விசாரணையும் அடுத்ததாக, நவ.30 நடைபெற உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *