கருநாடக எஸ்.அய்.ஆர். பரபரப்பு இரு மாநில வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. நிர்வாகி குடும்பத்தினர் பெயர்!

1 Min Read
- Advertisement -

பெங்களூரு, அக்.28 கருநாட காவில்  எஸ்.அய்.ஆர். பணிகள் தீவிரமாக நடைபெற்று  முடிந் துள்ளது இதில், சுமார் ஒரு கோடிபெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஆனால், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலின் நேர்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும் வகையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

பாஜக நிர்வாகியான உதயகுமார் அவரது மனைவி பிந்துகுமாரி உட்பட குடும்பத்தினரின் பெயர்கள், கருநாடகா, பீகார் ஆகிய இரு மாநிலங்களின் இறுதி வாக்காளர் பட்டியலிலும் இன்னமும் இடம் பெற்றுள்ளன வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாஜக உறுப்பினரான உதய குமாரும் அவரது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக பெங்களூரு வடக்கில் வசித்து வருவதுடன், அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தொடர்ந்து வாக் களித்தும் வந்துள்ளனர். இருப்பினும், பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, உதய குமார் தனது சொந்த ஊரான நவாடா பகுதிக்குச் சென்று குடும்பத்தோடு வாக்களித்துள்ளார். பெங்களூரு வடக்கில் ஏற்ெகனவே வாக்களித்த நிலையில், பீகாரிலும் வாக்களித்ததை அவரே ஒப்புக்கொண்டதுடன், தங்களிடம் பீகார் மாநில வாக்காளர் அடையாள அட்டையும்  இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, தகுதியானவர்களுடன் கூடிய நேர்மையான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதே தேர் தல் ஆணையத்தின்  எஸ்.அய்.ஆர். பணியின் முதன்மை நோக்கமாகும்.   ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள கர்நாடகாவின் தற்போதைய வாக்காளர் பட்டியலிலும் உதய குமார் குடும்பத்தினரின் பெயர்கள் நீக்கப்படாமல் அப்படியே இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங் களில் பாஜகவைச் சேர்ந்த பலருக்கு இதுபோன்று இரட்டை வாக்காளர் அடையாள அட் டைகள்  செயல்படும் நிலையில் இருப்பது, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு நடவடிக்கைகளின் வெளிப் படைத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினரிடையே கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *