பாட்னா, அக். 28- பீகாரில் பாஜக – அய்க்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமாரிடம் இருந்து பதவியைப் பறித்த பாஜக, முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரியை (பாஜக) அமர வைத்துள்ளது. அதே போல முக்கிய அமைச்சர் பொறுப்புகள் பாஜக வினரிடமும், முக்கியத் துவம் இல்லாத இதர அமைச்சர் பொறுப்புகள் அய்க்கிய ஜனதா தளம் கட்சியிடம் உள்ளன.
இந்நிலையில், பீகார் மாநில சட்டமேலவைத் தேர்தல் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் நிலைமை மேலும் சரிவுக்குள்ளாகி வருவதுஅம்பலமாகியுள்ளது. அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், நீண்ட காலம் மோகாமா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்த் சிங், சட்டமேலவைத் தேர்தலில் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் நீரஜ் குமாரை தோற்கடிப்பேன் என்றுசபதமிட்டு, ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் அனுஜ் சிங்கிற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அய்க்கிய ஜனதா தளம் ஆனந்த் சிங், அவரது மனைவியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நீலம் தேவி ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்கியது. மேலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ஆனந்த் சிங்கின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு பீகார் சட்டப்பேரவைத் தலைவர் பிரேம் குமாருக்கு அய்க்கிய ஜனதா தளம் பரிந்துரை செய்துள்ளது.
அய்க்கிய ஜனதா தளம் கட்சியே இல்லை
ஆனால் ஆனந்த் சிங், ”கட்சி எந்த நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை” எனக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”அய்க்கிய ஜனதா தளம் கட்சி நிதிஷ் குமாருக்குச் சொந்தமானது. இப்போது நிதிஷ்குமார் தீவிர அரசியலில் இல்லாதபோது, இந்தக் கட்சியில் என்ன எஞ்சியிருக்கிறது; என்னை நீக்கியதலைவர்களில் யாருக்காவது என்ன பங்களிப்பு இருக்கிறது ; இனி அவர்களுக்கு 10 இடங்கள்கூட கிடைக்காது. நான் தனியாகஒரு புதிய கட்சியைத் தொடங்குவேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று ஆனந்த் சிங் கூறினார். ஆனால் ஆனந்த் சிங் வேறுகட்சியில் இணையப் போகிறாரா? என்பது தொடர்பாக இதுவரைஎவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அய்க்கிய ஜனதா தளம் கட்சியை பாஜக விழுங்கிக் கொண்டிருப்பதை ஆனந்த் சிங் அம்பலப்படுத்தியுள்ளார் என ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரியா ஜனதா தளம் கட்சி கூறியுள்ளது.
இத்தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் மங்கனி லால் மண்டல்கூறுகையில்,”அய்க்கிய ஜனதாதளம் கட்சிக்குள் நடக்கும் மோதல் மற்றும் அனைத்து விவகாரங்களும் பாஜகவின் தூண்டுதலினாலேயே நடக்கிறது. ஆட்சியில் பங்கு கொண்டிருக்கும் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங் எப்படிவேறொரு கட்சிக்கு வாக்களிப்பார்; சோட்டே சர்க்கார் என அழைக்கப்படும் ஆனந்த் சிங்கின் அரசியல் வரலாறு அசைக்க முடியாதது. அவர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பிலும், சுயேச்சை வேட்பாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதோடு, 2005, 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மொகாமா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அய்க்கிய ஜனதாதளம் கட் சியை கைப்பற்றுவது மற்றும் உடைப்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால் அவர் கிஷோர் கட்சிக்கு வாக் களித்துள்ளார். அதாவது அய்க்கிய ஜனதா தளம் கட்சியை பாஜக விழுங்கி கொண்டிருப்பதை ஆனந்த் சிங் அம்பலப்படுத்தி யுள்ளார்” என்று அவர் கூறினார்.
மிரட்டலைத்
தொடங்கிய பா.ஜ.க.?
தொடங்கிய பா.ஜ.க.?
முக்கியத்துவம் இல்லாத இதர அமைச்சர் பொறுப்புகளையும் கைப்பற்ற பா.ஜ.க., அய்க்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்கும் முனைப்பில் தீவிர சதி வேலையில் இறங்கியுள்ளது. இந்த சதியை அறிந்து கொண்ட ஆனந்த் சிங் கட்சியில் இருந்து நழுவிவிட்டார். தேர்தலுக்குப் பின் நீரஜ்குமாரும், அய்க்கிய ஜனதா தளம் கட்சியை விட்டு விலகுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சியில் இருந்து மூத்த மற்றும்முக்கிய தலைவர்கள் வெளியேறும் முன்னரே, மிரட்டல் மூலம் தங்கள் பக்கம் இழுக்க பாஜக தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மிரட்டலில் ஆனந்த்சிங்கும் இருப் பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
