நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 65 முதுநிலை தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். F.6/11/SPA/2026-SC (RC)
பணி: முதுநிலை தனி உதவியாளர் (Senior Personal Assistant). காலியிடங்கள்: 65
ஊதியம்: மாதம் ரூ.47,600 -1,51,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்ற தெரிந்திருப்பதுடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 110 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.11.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை பெருநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரு.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500. கட்டணத்தை யுகோ வங்கி மூலமாக இணைய வழியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.11.2026
