பெல் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்

- Advertisement -

திருச்சி, ராணிப்பேட்டை உட்பட நாட்டின் 11 இடங்களில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் அய்.டி.அய் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), நிறுவனத்தில் கைவினைஞர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 660 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 660

பிட்டர் – 278, வெல்டர் – 104, டர்னர் – 52, மெஷினிஸ்ட் – 101, எலெட்ரீசியன் – 90, எலெட்ரானிக்ஸ்  மெக்கானிக் – 23, பவுண்ட்ரிமேன் – 12.

வயதுத் தகுதி: 01.10.2026 அன்று 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினர் 30 வயது வரையிலும், எஸ்.சி,
எஸ்.டி பிரிவினர் 32 வயது வரையிலும் விண்ணப் பிக்கலாம்.

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் அய்.டி.அய் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 29,500 – 65,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங் களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.bhel.in/ என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்க கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.1072, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ. 472.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *