ரயிலில் இனி இரவு 11 மணிக்கு மேல் கைப்பேசி ‘சார்ஜ்’ செய்ய முடியாது

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 28- ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கைப்பேசி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இதற்காக அனைத்து வகையான ரயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு கைப்பேசி சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயண நேரத்தில் கைப்பேசி மற்றும் மடிக்கணிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட ஒரு ரெயிலில் பயணி ஒருவர் பவர்பேங்கை சார்ஜிங் பாயிண்ட்டில் பொருத்தி விட்டு தூங்கிகொண்டிருந்த போது வெடித்து புகை கிளம்பியது. ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதனைத்தொடர்ந்து, ரயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தும் நிலவுவதால், இந்த உத்தரவை ரயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *