60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

- Advertisement -

வாசிங்டன், அக். 27- ஏஅய் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எண்ட்ரி லெவல், மிட் லெவல் பணிகள் பலவற்றிலும் முன்னணி அய்டி நிறுவனங்களே ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே அமே சான், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவ னங்கள் ஆட்குறைப்பு நடவடிக் கையை அறிவித்தது. உலகின் முன்னணி நிறு வனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஅய் தொழில்நுட்பம்) உள்ளிட்டவற்றில் முதலீடு களை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத் தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக் கப்பட்டுள்ளது. மைக்ரோ சாஃப்ட்டின் ஆண்டு அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, அந்நிறு வனத்தில் உலகளவில் 2,23,000 முழுநேர ஊழி யர்கள் இருந்தனர்.

விருப்ப ஓய்வு திட் டத்தை ஏற்றுக்கொண்டு வெளியேறும் ஊழியர் களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிலை யான பணிநீக்க இழப் பீடு, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள், தொழில் மாற்றத்திற்கான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் முதல் வாரத் திற்குள் முடிவு செய்ய வேண்டும். விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்தில் இருந்து வெளியேறு வார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *