டில்லியைத் தொடர்ந்து மும்பையிலும் தீவிரமடையும் காற்று மாசுபாடு முதலமைச்சர், இரண்டு துணை முதலமைச்சர்கள் இருந்தும் பலனில்லை – பொதுமக்கள் வேதனை

- Advertisement -

மும்பை, அக்.27 நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையில் காற்றுத் தரம் மிக மோசமான அபாய நிலையை எட்டியுள்ளது. டில்லியைப் போலவே மும்பையிலும் நச்சுப் புகை ஆட்கொண்டு வரும் நிலையில், மாநகராட்சி மற்றும் மாநில அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்காலும், ஊழல் நிறைந்த செயல்பாடுகளாலும் மாசுபாடு கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பொதுமக்கள் மற்றும் உழைப்பாளர்களின் வாழ்வுரிமை பாதிப்பு

நாள்தோறும் சாலையில் பயணிக்கும் சாமானிய மக்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தொடர் பணியில் ஈடுபடும் போக்கு வரத்துப் காவல்துறையினர் இந்த நச்சுப் புகையைச் சுவாசித்து வருகின்றனர். இதன் காரண மாகக் கண் எரிச்சல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய்கள் போன்ற கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர்.குடிநீரில் கழிவுநீர் கலப்பதுடன், சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சு பரவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. “மரணத்தை விடவும் கொடிய இந்த அவல நிலைக்கு எதிராகப் பொதுமக்கள் தங்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காக அதிகாரிகளிடம் கேள்வி கேட்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 3 முதலமைச்சர்கள் இருந்தும் செயலிழந்த நிர்வாகம்? மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் இரு துணை முதலமைச்சர்கள் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருக்கின்றனர்.

 நேர்மையான வரி செலுத்தும் குடிமக்கள் கேட்கும் ஒரே கேள்வி

“பொதுமக்கள் அதிக அளவில் வரி செலுத்தியும் அடிப்படைப் பிரச்சினைகள் தீரவில்லை; 3 முதலமைச்சர்கள் ஆட்சியில் இருந்தும் காற்று மாசுபாட்டைத் தடுக்க என்ன முறையான செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” என்பதுதான். ஒருபுறம் காற்று மாசுபாடு தீவிரமடைந்து வரும் வேளையில், மறுபுறம் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் சுமார் 7,500-க்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்குக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இயற்கைப் பாதுகாப்பையும், குடிமக்களின் சுகாதாரத்தையும் புறந்தள்ளிவிட்டு உள்கட்ட மைப்பு பணிகளுக்காக மரங்கள் அழிக்கப்படுவதால் நகரத்தின் சுற்றுச்சூழல் மேலும் சீர்கேட்டையும் சூழல் உருவாகியுள்ளது.   சுற்றுச்சூழலை சீரழிக்கும் இத்தகைய திட்டங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தி, மாற்று வழிகளில் தூய்மையான காற்றை உறுதி செய்ய மகாராட்டிர அரசும், மும்பை மாநகராட்சியும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *