லக்னோ, அக். 27 உத்தரப் பிர தேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் நவதீப் ரின்வா அய்.ஏ.எஸ் அவர்களின் குடும்பப் பின்னணி குறித்து அண்மையில் பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
நவதீப் ரின்வாவின் குடும்பத்தினர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பிரிஜ் லால் ரின்வா, பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார்.
தாயார் சரஸ்வதி ரின்வா, பஞ்சாப் பா.ஜ.க மகளிர் அணியில் பொறுப்பில் இருந்தவர்.
சகோதரர் சந்தீப் ரின்வா, பஞ்சாப் மாநில பா.ஜ.க நிர்வாகியாகச் செயல்பட்டவர். இவரது தாத்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளராக இருந்தார்
உயர்பதவியில் இருக்கும் ஓர் அரசு அதிகாரியின் குடும்பத்தினர் குறிப்பிட்ட (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக) கட்சியுடன் தொடர்பு டையவர்களாக இருக்கும்போது, அந்த அதிகாரியின் செயல்பாடுகளும் நம்பகத்தன்மையும் குறித்த கேள்விகளும், விமர்சனங்களும் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இயல்பாகவே முன்வைக்கப்படுகின்றன.
அதேவேளையில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் நியமனம், செயல்பாடுகள் குறித்த சட்டபூர்வமான நடை முறைகளையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் ஒரு சுயேச்சையான அமைப்பாகும். தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருக்கும் ஒருவர், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அப்பாற்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மட்டுமே செயல்படக் கடமைப்பட்டவர்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் மட்டும் மோசடி யாக 38,000 வாக்காளர்கள் சட்ட விரோதமாக நீக்கப்பட்டுள்ளனர். அதுவும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் நீக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடவே அவர் விசாரணை மேற்கொண்ட போது, தனது உறவினர்கள் பலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்துள்ளார். இவர்கள் அனைவருமே அனைத்துச் சான்று களையும் தேர்தல் ஆணையத்திடம் காட்டிய பிறகும் இவர்களது பெயர் விடுபட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை கடுமையான கண்ட னங்களைத் தெரிவித்திருந்தது. விரைவில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் மிகவும் மோசடியாக இஸ்லாமியர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமைத்தேர்தல் ஆணை யர் விளக்கம் அளிக்காமல் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார்.
உத்தரப்பிரதேசம், பா.ஜ.க. அரசுக்கு மிகவும் முக்கியமான மாநிலமாகும். மிகவும் திட்டமிட்டு பாஜக – ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட ஒருவர் நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக மோடி அமித்ஷாவின் கட்டளையின் பேரில் நியமிக்கப்பட்டு உள்ளாரோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
ஊட்டி ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவைகள் 29 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
