தலைமைத் தேர்தல் ஆணையரின் 14 முடிவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு! உச்சநீதிமன்றத்தில் விசாரணை

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.27  தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எடுக்கப்படும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (27.10.2026) விசாரித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக எழுந்துள்ள புகார்களுக்கு நடுவே இந்த விசாரணை நடைபெற்றது.

கடந்த சில வாரங்களாகவே தேர்தல் ஆணையம் மீது, குறிப்பாக தலைமை தேர்தல் ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார்.. பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாகும்.

அதாவது 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரை வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக குறைந்தது 14 முறை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஆட்சேபனைகளை தெரிவித்தாலும் அதை மீறி தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் என்பது மூன்று உறுப்பினர்களின் கூட்டு ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்துகின்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். இந்த விதி மீறப்பட்டுள்ளதால் ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து இடைக்காலமாக இடை நீக்கம் செய்யவும், இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 14 முடிவு களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், 2025 ஜூன் – அக்டோபர் மற்றும் 2026 மே மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட மூன்று உத்தரவுகளும் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. குற்றச்சாட்டுகளை மறுத்து, தேர்தல் ஆணையம் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதற்குப் பதிலளிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் வழக்கைப் பத்து நாள்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *