சாவ்பாலோ, அக். 26- தென்அமெரிக்காவின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடான பிரேசிலில் நடைபெற்ற விறுவிறுப்பான அதிபர் தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளரான பிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி பொதுவுடமைக் கட்சி தலைவரும் தற்போதைய அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
முதல் கட்ட வாக்கெடுப்பில் பிளாவியோ போல்சோனாரோ அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்த நிலையில், இறுதி முடிவை தீர்மானிக்கும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் லூலா டா சில்வா 43 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பிரேசிலில் 1980-களில் ஜனநாய கம் மீட்டெடுக்கப்பட்ட பிறகு, முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்துவிட்டு இரண்டாம் சுற்றில் மீண்டெழுந்து வெற்றி பெற்ற முதல் அதிபர் என்ற வரலாற்று சாதனையை லூலா படைத்துள்ளார்.
“ஜனநாயகத்தின் வெற்றி”
வெற்றிக்குப் பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய லூலா டா சில்வா:
“இந்த தேர்தல் வெற்றி என்பது பொய்களுக்கும் அறிவியல் மறுப்பிற்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்வி. எனக்கு வாக்களிக்காதவர் களையும் சேர்த்து அனைத்து பிரேசில் மக்களுக்காகவும் நான் செயல்படுவேன். நமது நாட்டின் ஜனநாயகமும் சமூக நீதியுமே இத்தேர்தலில் வென்றுள்ளது,” என உருக்கமாகப் பேசினார்.
4ஆம் முறையாகப் பதவி
பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரான லூலா டா சில்வா, ஏற்கெனவே 2003, 2007 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அதிபராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
தற்போது இத்தேர்தல் வெற்றியின் மூலம் 4ஆம் முறையாக பிரேசிலின் அதிபராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். அவரது புதிய பதவிக்காலம் வரும் 2027 ஜனவரி 5 அன்று தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தில் வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், தனது பொருளாதார மற்றும் சமூக நலத்திட்டச் சட்டங்களை நிறை வேற்றுவதில் லூலாவுக்குக் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.
முன்னாள் அதிபர் ஜாய்ர் போல்சோனாரோ மற்றும் அவரது மகன் பிளாவியோ போல்சோனாரோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், லூலாவின் இந்த வெற்றி லத்தீன் அமெரிக்க பகுதியில் இடதுசாரி கொள்கைகளின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
வெற்றிச் செய்தி உறுதியானதைத் தொடர்ந்து, சாப்பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான லூலாவின் ஆதரவாளர்கள் கம்யூனிசக் கொடியேந்தி சிவப்பாடைகளை அணிந்து வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
