ரோம், அக். 26- பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து அய்ரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் 24.10.2026 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி, ஊழல், ஓய்வூதியம், வீட்டு வசதி, போர் எதிர்ப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்பேனியா நாடுகளில் பொது மக்கள் பேரணி மற்றும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இத்தாலியில் மிலன், ரோம், டூரின் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் பேரணி மேற் கொண்டனர். மிலனில் போராட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையில், ரோம் மற்றும் டூரினில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே லேசாக மோதல் ஏற்பட்டது.
அல்பேனியா தலை நகர்டிரா னாவில் போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். போராட்டக்காரர்களில் சிலர் அரசு கட்டடங்களுக்குத் தீ வைத்த நிலையில், அவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்ரிட்டில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.
பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டம் அய்ரோப்பக் கண்டம் முழுவதும் பரவும் என அந்நாட்டு அரசுகள் அச்ச நிலையில் உள்ளன.
