போடியில் மக்கள் சேவையில் பெரியார் சமத்துவம் அறக்கட்டளை பேபி சாந்தா இரகுநாகநாதன் ஆகியோரின் மக்கள் பணி!

2 Min Read
- Advertisement -

பேபி சாந்தா தேவி இரகுநாகநாதனின் 77ஆம் ஆண்டு பிறந்த நாள் 23.10.2026 பெரியகுளம் ம.பெ முத்துக் கருப்பையா வின் வழிகாட்டலால் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டு கொள்கை வழியில் பெரியகுளம் பால் கடை அழகிரி தலைமையில்  திருமணம் நடைபெற்றது. தேனி மாவட்டம் முழுவதும் கழக பல்வேறு இடங்களில் கிளைகள் இவர்களால் தொடங்கப்பட்டது.

இரகுநாகநாதனின் தந்தை சங்கிலி பெயரில் போடியில் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு 55 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

BSRB வங்கித் தேர்வுக்கு பெரியார் சேவை மய்யம் தொடங்கி இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. அதில் படித்த மாணவர்கள் வங்கி வேலைக்கு சேர்ந்துள்ளனர். எல்.அய்.சி.யில் பிற்படுத்த பட்டவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.  எல்.அய்.சி.க்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் தொடங்கி 25 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். தந்தை பெரியார் உடல்கொடை, விழிக் கொடை கழகம் தொடங்கி 36 பேர்களின் விழிகள் கொடையாக கிடைக்க உதவி புரிந்தவர்கள். உடற் கொடை சுமார் 10 க்கும் மேற்பட்ட உடல்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது.

நாம் பிறந்த ஊருக்கு நல்ல செயல் செய்ய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் பெரியார் சமத்துவம் அறக்கட்டளை தொடங்கி போடி நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன இடுகாட்டை நடத்தி அனைவரின் பாராட்டையும் அன்பையும் பெற்று வருகிறார்.

“ஏழை எளிய மக்களுக்கு… துக்க நேரத்தில் நான் இருக்கிறேன்“ என நம்பிக்கையை ஊட்டி அனைத்து  உதவிகளையும் செய்து வருகிறார்.

தந்தை பெரியார் காலம் தொடங்கி தமிழர் தலைவர் ஆசிரியரின் காலம் வரைக்கும் தந்தை பெரியார் பணி முடிக்க இயக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

தனது பிள்ளைகளுக்கு தமிழர் தலைவர் தலைமையில் வாழ்க்கை இணை நலம் நடத்தி வைத்தனர். தொண்டறம் ஆற்றும் ச. இரகுநாதன் – பேபி சாந்தாதேவி ஆகியோரின் சிறப்பை ஏராளமானோர் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பேபி சாந்தா தேவி பணி செய்யும் பள்ளியில் நானும் கம்பம் கழக மாவட்ட செயலாளர் பசெந்தில்குமார் அவர்களும் தொடக்கப் பள்ளியில் படித்தோம். நான் தேனி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் செந்தில் கம்பம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் என்னை போன்றோர் பெரியார் வழியில் மனித பற்றாளனாக செயல்பட வைத்தவர் பேபி சாந்தா தேவி

தேனி மாவட்ட தலைவர் ம.சுருளிராஜ் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *