பின்தலைக் காயம் ஆபத்தா?

- Advertisement -

மருத்துவம்

மருத்துவர் கு.தெய்வீகன்
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், (ஓய்வு) அரசு ராஜீவ்காந்திபொது மருத்துவமனை, சென்னை.

 

“எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது பழமொழி. சிரசு என்றால் தலை. உடலின் அத்தனைச் செயல்களையும், சிந்தனையையும், இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது தலை என்பதால் இதுவே முதன்மையானது என்பதை இந்தப் பழமொழி விளக்குகிறது.

தலைக்காயம்

கேள்வி: தலைக்காயம் பற்றி விரிவாக (Birds Eye view)கூறுங்கள்.

பதில்:- தலைக்காயம் என்பது 1.உச்சந்தலையில் காயம் (SCALP INJURY). 2.எலும்புக் காயம் (Bone Injury). 3. மூளைக்காயம் (Brain Injury)  என காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து லேசானவை மற்றும் தீவிரமானவை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

கேள்வி:- தலைக்காயம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது?

பதில்:- எல்லாத் தலைக்காயமும் ஆபத்தானவை என்று கூறிவிட முடியாது. மருத்துவப் பயனாளிக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையைப் பரிசோதித்து அறிந்த பின்னர்தான் தெளிவுபடுத்த முடியும்.

mild Head Injury (லேசான தலைக்காயம்)

moderate head injury (மிதமான தலைக்காயம்)Severe head injury (கடுமையான தலைக்காயம்) என பிரிக்கப்படுகின்றன.

சி.டி.ஸ்கேன்

கேள்வி:- எந்த வகையான தலைக்காயங்களுக்கு சி. டி. ஸ்கேன் எடுக்கவேண்டும்?

பதில்:- 1.சுயநினைவு இழந்தவர்கள் (concussion brain), 2. முழுமையாக நினைவு இழந்தவர்கள் (Unconscious patients), 3. அடிபட்டவுடன் வலிப்பு வருபவர்கள் (Post Traumatic seizures), 4. வாந்தி எடுப்பவர்கள். 5. காது மூக்கு தொண்டையிலிருந்து ரத்தமோ, தண்ணீர் போன்ற திரவமோ கசியும் நிலையில் உள்ளவர்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்துமே தீவிரமான தலைக் காயத்திற்கான அறிகுறிகளாகும்.

கேள்வி:- தலைக்காயம் பட்டவருக்கு முதல் உதவி?

பதில்:- தலையில் அடிபட்டவர்களுக்கு சுமார் பத்து ரத்த நாளங்கள் ரத்தம் கொடுப்பதால் அதிகமாக ரத்தம் கசியும். இந்த ரத்தப் போக்கை அடக்க, குறைக்க சுத்தமான துணியை வைத்து அழுத்தி இறுக்கமாகக் கட்டுப் போட வேண்டும். சிலருக்கு தலையில் வீக்கம் ஏற்படும். இதற்கு அய்ஸ் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும், வீக்கமும் குறையும். வலிப்பு வரும் நோயாளிகளையும், வாந்தி எடுக்கும் நோயாளிகளையும் பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். ஏனென்றால் சுவாசக் குழாயைப் பாதுகாக்க இதுதான் சிறந்த position  ஆகும்.

நோயாளியை முடிந்த  அளவு அனைத்து வசதிகளும் (All under one roof) உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரம் தலைக் காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள்.

கேள்வி:- தலைக்காயம் எத்தனை வகைப்படும்?

பதில்:- (அ) Scalp injury – தலையில் உள்ள தோலில் மட்டும் வீக்கம் (contusion), வெட்டுக்காயம் (cut injury), கிழிந்த காயம் (Laceration scalp).

(ஆ) Linear எலும்பு முறிவு, Depressed எலும்பு முறிவு, Pond Depressed எலும்பு முறிவு

(இ) Extra Dural – எலும்புக்கும் மூளை ஜவ்வுக்கும் இடையில் ஏற்படும் இரத்தக்கசிவு.

  1. Sub dual hematoma (மூளை ஜவ்வுக்கு கீழ் மூளையின் மேல்பகுதியில் இரத்தக்கசிவு)
  2. intra celebral hemafoma (மூளைக்குள்ளேயே இரத்தக்கசிவு)

இவை அனைத்தும் தனியாகவோ, சேர்ந்தோ இருக்கலாம்.

ஊமைக்காயம்

  1. Diffuse Axonal injury (dai) ஊமைக்காயம் (ஆபத்தானது)
  2. தலையில் பின்பகுதியில் ஏற்படும் Brain stem injury posterior fossa haematoma.

ஆகியவை மிகவும் ஆபத்தானவை.

  1. தலைக்காயத்துடன் ஏற்படும்
  2. Chest injury(நெஞ்சுக்காயம்)
  3. Abdominal injury(வயிற்றுப்பகுதி காயம்)
  4. Pelvic injury(அடிவயிற்றுக்காயம்)
  5. Long bone fracture (நீளமான எலும்பு முறிவு)
  6. Spine fracture (முதுகு எலும்பு முறிவு)

ஆகியவை தலைக்காயம் குணமாவதை தாமதமாக்குகிறது.

கேள்வி:- பெரும்பாலும் பின்தலைக்காயம் ஆபத்தானது என்று கூறப்படுகிறதே?

பதில்:- தலையின் பின்பகுதி  Posterior Fossa posterior fossa

என்று அழைக்கப்படும். பின் தலையில்தான் சிறு மூளையும், மூளைத்தண்டும் உள்ளன. இவை உடலின் சமநிலை மற்றும் நடையைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் பாதிப்பு ஏற்பட்டால் தலைச்சுற்றல் அல்லது நடப்பதில் சிரமம் வரலாம். இந்தப் பகுதி மிகவும் சிறிய அளவு கொண்டது. அதனால் குறைந்த அளவு ரத்தம் கசிந்து சேர்ந்தாலும் (Hematoma) உயிருக்கு ஆபத்தாக முடியும்.

மிக முக்கிய centres உள்ள இடம். இந்த இடம் பாதிக்கப்படும்போது உயிருக்கு மிக ஆபத்தாக முடியும். மூளைத்தண்டுதான் சுவாசம், இதயத்துடிப்பு, கை, கால் அசைவு ஆகிய மிக முக்கிய centre உள்ள இடம். இந்த இடம் பாதிக்கப்படும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

Poskiol fosra hematoma இருக்கும் பட்சத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும். காலம் தாழ்த்தினால் உயிரிழப்பு ஏற்படக்கூடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *