ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு! 6

- Advertisement -

ஜப்பான் மாநாட்டில் வெவ்வேறு நாடுகளில் இருந்து 70 பேர் கலந்து கொண்டனர். இதுதவிர சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு, நிகழ்ச்சிக்கு அழைத்து வருதல், அவரவர் நேரத்திற்கு ஏற்ப தங்குமிடத்தில் கொண்டு விடுதல் என ஜப்பான் தோழர்கள் அவ்வளவு நேர்த்தியாகப் பணிகளைச் செய்தனர்.  அதற்குக் காரணம் மிகச் சரியான திட்டமிடல். ஒரு தோழருக்குக் காலை 7-8, பிற்பகல் 3-4, இரவு 8-9 என நேரம் ஒதுக்கி இருந்தால், அந்த நேரத்தில் வந்து பணிகளை முடித்துவிட்டு, பிறகு சொந்த வேலையாகக் கூட சென்றுவிடலாம்.

திராவிடர் கழகம்

சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட தோழர்கள்!

ஒப்புக் கொண்ட வேலைகளை ஈடுபாட் டுடன் செய்தார்கள். அந்தளவு திறமையோடு இருப்பதால் தான் ஜப்பானிய நிறுவனங்களில் பணிபுரிய முடிகிறது. மேலும் “தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு” என்று இல்லாமல் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வம்தான், இந்த மாநாட்டு வெற்றிக்கு முழுக் காரணம்.

அந்த வகையிலே, வரவேற்பு மற்றும் பதிவுக்குழுப் பொறுப்பைத் தோழர்கள் பூர்ணிமா, ரேவதி, இராஜலட்சுமி ஆகியோர் புன்னகையுடன் ஏற்றனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பார்த்தசாரதி, கவிதா, அய்ஸ்வர்யாதேவி, பெட்ஸி, பவானி, யுனிஷா, பிரியங்கா, பிரஹர்ஷிதா, காவியா போன்றோர் கவிதையாக வடித்துத் தந்தனர். கோவிந்தராஜன், பிரியங்கா, வேல்முருகன் ஆகியோர் மேடைப் பேச்சுகளை இனிமையாக மொழிபெயர்த்தனர்.

ஒளிப்படக் கலைஞர்களாகத் தோழர்கள் ஆண்ட்ரூ மற்றும் சுந்தரகணபதி ஒளி வீசினார்கள்.

மேடை மற்றும் அரங்க நிர்வாகப் பொறுப்புகளை செந்தில் விநாயகம், சரவணக்குமார், சிவப்பிரகாஷ், கோசல்ராம், முரளி, முத்துபிரகாஷ், சையத் ஆகியோர் செம்மையாகச் செய்தனர். உணவு மேலாண்மைக் குழுவில் பிரதிக், அஜித், சுகந்தன், சுரேஷ், பத்மநாபன், சிவா, விஜய் கணபதி, ரகு, ஜாவீத், ராஜாமணி, சங்கர் ஆகியோர் சுவையோடு கவனித்துக் கொண்டனர்.

அதேபோல போக்குவரத்துக் குழுவில் பிரபு, பிரபாகரன், சரவணன் கருப்பையா, செந்தில் சுப்பையா, வினோத் சரவணன், ராஜ்கமல், சீனிவாசன், கணேஷ் ஏழுமலை, சந்தோஷ் மோகன் ஆகியோர் சிறப்பாக வழிகாட்டினர்.

ஒளிப்பதிவு மற்றும் நேரலைப் பொறுப்பைத் தங்கு தடையின்றி செய்தவர்கள் தோழர்கள் ஆதிசேஷன் மற்றும் விஜய் மோகன். தங்குமிட மேலாண்மைக் குழுவில் தோழர்கள் கார்த்தி முத்தையா, ராஜா விக்ரம், ராம்குமார் ஆகியோரின் நேர்த்தி இருந்தது.

திராவிடர் கழகம்

“அன்பு” கலந்த உணவுகள்!

தொழில் அடிப்படையில் மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் உணவைச் சமைத்து, அதில் “அன்பு” கலந்து பரிமாறிய உணவகங்கள் ஶ்ரீபாலாஜி தென்னிந்திய உணவகம், மொரிங்கா, பி2சி கிச்சன், எஸ்கே கிச்சன், கிரேஸ் கிச்சன், மும்பை ரிஜென்சி ஆகியவை.‌ இவற்றையும் கடந்து மாநாட்டு வெற்றிக்கு நன்கொடை வழங்கிச் சிறப்பித்த புரவலர்கள் ஶ்ரீபாலாஜி தென்னிந்திய உணவகம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆஸ்திரேலியா, ருசி இந்திய உணவகம், சரவணபவன் ஜப்பான், சன்வெல்ஸ், நெக்ஸ்ஜென், டெக்கான்சாஃப்ட், கேசிசியெஸ் ஆகியோர்!

ஜப்பானில் தங்கியிருந்த 5 நாட்களும் காலை 8 மணியளவில் விடுதிக்கே சிற்றுண்டி வந்துவிட்டது. 15 அறைகளில் இருந்த 30 தோழர்களுக்கும் அவரவர் அறைகளுக்கே சென்று சிற்றுண்டி வழங்கி வருவோம். ஒன்பது மாடி கொண்ட விடுதி அது. பேசும் போதும், நடக்கும் போதும் கூட வெளியில் சத்தம் கேட்கக் கூடாது. பூனை நடை நடந்து தான் செல்ல வேண்டும். அறைக் கதவைத் தட்டும் போது கூட மெல்லிய அளவிலே தட்ட வேண்டும். யாருக்கும் தொந்தரவு இன்றி, அமைதியாகவே வாழப் பழகியவர்கள் ஜப்பானியர்கள். எனவே அவர்கள் நாட்டில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங் வேண்டியது நம் கடமை!

முன்பை விட ஜப்பானில் தென்னிந்திய உணவகங்கள் அதிகரித்துவிட்டன. எனினும் எங்குமே காலை உணவுகள் கிடைக்காது. நமக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்தார்கள். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சேமியா உப்புமா, கேசரி, வடை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கொடுத்தார்கள். அய்ந்து நாட்களும் நமது அறைக்கே சிற்றுண்டி வந்துவிட்டதால், நமக்கான அலைச்சலும், நேரமும் மிச்சம். மாநாட்டிற்கான உழைப்பு மட்டுமின்றி, தமிழ்நாட்டுத் தோழர்களுக்கான கவனிப்புகளிலும் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டனர்!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *