அஞ்சுமன் நூலகத்தின் நூற்றாண்டு 2026, அறிவுத் திருவிழாவாக நடைபெற்றது

- Advertisement -

கோட்டக்குப்பம், அக்.25 புதுவை மாநிலத்தின் அருகில் அமைந்துள்ள கோட்டக் குப்பத்தில் 1926 இல் நிறுவப்பட்ட அஞ்சுமன் நூலகத்தின் நூற்றாண்டு விழா புதுச்சேரி, காமராஜர் மணிமண்டபத்தில் அக்டோபர் மாதம் 23, 24,மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது.

அதில் 24-10-2026 அன்று நண்பகல் 12.00 மணியளவில் சென்னை தயைமிகு அமீர் ஜான் – அபீனா பிவி அறக்கொடை நிகழ்ச்சியில்,  மாநாட்டு மய்யப் பேருரை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர்  சிவ. வீரமணி தலைமையில்  கோட்டக் குப்பம் நகராட்சி, நகரமன்றத் தலைவர்  எஸ்.எஸ். ஜெயமூர்த்தி  முன்னிலையில் விரிவுரையாளர் ஆதி.சுப. சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.  உத்தமபாளையம் எச்.கே.ஆர்.எச் கல்லூரி, தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர். முஹம்மது ரபீக் நோக்கவுரை நிகழ்த்தினார்.

மருத்துவர்களின் அறிவுரைக்கு இணங்க, வெளியூர் பயணங்களில் கலந்து கொள்ள இயலாத தமிழர் தலைவர்  ஆசிரியர் அய்யா  காணொலி மூலம் மாநாட்டு மேடையில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து  திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தனக்கு அளிக்கப்பட்ட ‘‘சுயமரியாதை இயக்கமும் , அஞ்சுமன் நூலகமும்’’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். வரவேற்புக் குழுச் செயலாளர் அ.அபூபக்கர் சித்தீக் நன்றி கூறினார்.

நூற்றாண்டு விழாவின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அஞ்சுமன் நூலகத்தின் பொதுச் செயலாளர் அ. லியாகத் அலி ,புதுவைச் சிவம் அவர்களின் மகன் சிவ. இளங்கோ , மேனாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர. பாலகிருஷ்ணன்  ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்பித்தார்கள்.

ஆசிரியர் அவர்களின் வாழ்த்துக் கடிதம் மேடையில் வாசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்டத்  கழகத் தலைவர் வே. அன்பரசன், செயலாளர் தி.இராசா,  பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார்,  கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் , செயலாளர் ஆ. சிவராசன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. குமரன்,  கழக நகராட்சி மற்றும் கொம்யூன் பொறுப்பாளர்கள் எஸ். கிருஷ்ணசாமி, மு.ஆறுமுகம் , திருவள்ளுவர் சண்முகம், இரா. திருநாவுக்கரசு, களஞ்சியம் வெங்கடேசன், கடலூர் சிவக்குமார், பெரியார் பிஞ்சு மகிழ்நன்,  முனைவர் அனாமுல் அசின், புதுவைத் தமிழ்ச் சங்க பொருளாளர் மு.பாலசுப்ரமணி மற்றும் பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் அறிஞர் பெருமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *