24-10-2026 தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் அவர்களின் 83ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தருமபுரி மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, அரூர் மாவட்டத் தலைவர் அ.தமிழ்செல்வன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதா மணி, மாவட்ட விவசாய அணித் தலைவர் ஊமை. காந்தி,ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தனர். நகரத் தலைவர் கரு.பாலன் பெரியார் நூல்களை வழங்கினார். உடன் பெரியார் படிப்பகம் உதவியாளர் அருணா,விடுதலை வாசகர்கள் மாதேஷ், செந்தில், துரை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்
கழகக் குடும்ப விழா
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
