சென்னை, அக்.24 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.தற்போது உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல மாகவும் அதனைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி வாக்கில் சக்திவாய்ந்த புயலாகவும் வலுப் பெறக் கூடும் என வானிலை மய்யம் கணித் துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத் துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
