கழகக் களத்தில்…!

2 Min Read
- Advertisement -

25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆம்பூர் வழக்குரைஞர் ஜெ.துரைசாமி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: காலை 10 மணி *இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *மணமக்கள்: து.இலக்கியா-வா.அங்குராஜ் *இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *அழைப்பு: வழக்குரைஞர் ஜெ.துரைசாமி (சென்னை உயர்நீதிமன்றம்)-டி.புஷ்பலதா, என்.வாசு தேவன்-வி.அன்னபூரணி.

26.10.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1119

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வழக்காடு மன்றத் தலைப்பு: திரைப்பட மோகத்திற்கு அடிமையாவோர் குற்றவாளிகளே! *நடுவர்:  வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *வழக்கு தொடுப்பவர்: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *வழக்கை மறுப்பவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: கி.குமார் (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

27.10.2026 செவ்வாய்க்கிழமை
இரா.சீனியம்மாள் அவர்களின்
8ஆம் ஆண்டு நினைவேந்தல்
– பெரியாரியல் பரப்புரை நிகழ்ச்சி

வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: சி.தர்மலிங்கம் (பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர்) *முன்னிலை: அரங்கபன்னீர்செல்வம் (கழகக் காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ந.கனகராசு (ஒன்றிய கழகத் தலைவர்)

1.11.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆற்காடு கே.கோதண்டம் அவர்களின் நினைவேந்தல்-படத்திறப்பு

இராணிப்பேட்டை: காலை 10 மணி *இடம்: கணியனூர் ரோடு, புது மாங்காடு கிராமம், ஆற்காடு ஒன்றியம், இராணிப்பேட்டை *தலைமை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்பு: சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: செ.கோபி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சொ.ஜீவன்தாஸ், க.தீனதயாளன் *படத்திறப்பு நினைவேந்தல் உரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.சடகோபன், இர.அன்பரசன், வி.இ.சிவக்குமார், கு.இளங்கோவன், ப.முனிசாமி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *