தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை 4900 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

- Advertisement -

சென்னை, அக். 24- தமிழ்நாட்டின் மின்தேவையைச் சமாளிக்கும் பொருட்டு வெளிச்சந்தையில் இருந்து 3 மாதங்களுக்கு 4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 4ஆம் குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்நுகர்வு அதிகரிக்கும் நேரங்களில் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்காக, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே 3 கட்டங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், தற்போது 4-ஆவது முறையாக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதற்குமான மின்சாரம், நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான மின்சாரம், மாலை முதல் நள்ளிரவு வரையிலான மின்சாரம் என மூன்று பிரிவுகளிலும் மின்சாரம் வழங்குவதற்கான விலையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்மூலம், தேவையான நேரத்தில் மின்சாரத்தைப் போட்டி விலையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிடும் விலை முக்கியப் பங்கு வகிக்கும். மின்சாரத்தின் தேவை, கிடைக்கும் அளவு, வழங்கப்படும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து கொள்முதல் செலவு மாறுபடலாம்.

இந்த ஒப்பந்தம் மூலம் எவ்வளவு மின்சாரம் இறுதியாகக் கொள்முதல் செய்வது, அதற்கான விலை எவ்வளவு என்பது ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னரே தெரியவரும். குறிப்பாக, மின்தேவை அதிகரிக்கும் நேரங்களில் மின் விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கு இத்தகைய குறுகிய கால ஒப்பந்தங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *