சென்னை, செப்.7- இந்தியாவில் உரிய சான்றிதழ் மற்றும் பதிவு இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் இயக்கப்பட்டு வருவதாக ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
டிரோன் பயன்படுத்துவதற்கான விதிகளை சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த விதிகளுக்கு உட்பட்டு தான் டிரோன் இயக்கப்பட வேண்டும்.
சமீபகாலமாக திருமண விழாக்கள் அல்லது பொது நிகழ்வுகளில் ஒளிப் படம் எடுப்பதற்கும், வேளாண்மை பணிகளுக்கும் டிரோன் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று டிரோன்கள் உரிய பதிவு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் முறையான பயிற்சிமின்றி விற்பனை செய்யப்படுவதாக அரசுசாரா அமைப் பான டிரோன் பெடரேசன் ஆப் இந்தியா (டி.எப்.அய்.) குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச் சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
10 கிலோவுக்கு மேல் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் டிரோன்கள், சான்றளிக்கப்பட்ட டிரோன்களுக்கு பொருந்தும் உயரம் மற்றும் தொலைவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கப்படுகின்றன.
வணிக டிரோன்கள், எலக்ட்ரிக் பொம்மைகள் எனக்கூறி வெளிநாடு களில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுபோன்று சட்டவிரோதமாக டிரோன்கள் இந்தியாவிற்கு வருவதற்கு தவறான வகைப்பாடு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், டிரோன் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப் பட்டு, இந்தியாவில் ஒன்றாக இணைக் கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் டிரோன்கள் நேரடி சந்தைகள், இணைய வழி வர்த்தகத் தளங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் உரிய சான்றிதழ் பதிவு இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விதிமீறல் தொடர்பான நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டிரோன்களை கண்ட றிந்து பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப் பட்ட விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
டிரோன்களின் உற்பத்தி மற்றும் வகை சான்றிதழ் பெறும்போது அவற் றின் உற்பத்தி நாடு குறித்த தகவலை தவறாக தெரிவிக்கும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கவும், அந்நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் டிரோன் தயாரிப் பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் டிரோன் உற்பத்தியைவூட்டுவதுடன், விதிமுறைகளை பின்பற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சமமான போட்டி சூழலை உருவாக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முடியும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
