திருமதி ப்ரியா ராஜன் 33 வயதான எம்.காம் பட்டதாரி.. இந்தியாவில் மிக அதிகளவில் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சி மேயர்….
அதுவும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரும் கூட.. தவெக கட்சி ஆரம்பித்த நாள் முதல் ப்ரியா ராஜன் மிகமிக ஆபாசமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதுடன், நடிகர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு மாநில தலைநகரின் மேயர் பொறுப்பு வகிப்பவர் எனும் ப்ரோட்டோகால் மரியாதை கூட கொடுக்காமல் தவெகவினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை முதலமைச்சர் விஜய் உட்பட தவெக அமைச்சர்கள் கூட கண்டு கொள்வதில்லை.
பொதுவாழ்வில் பயணிக்கும் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக ஓலமிடும் தவெக பிரமுகர்கள் மற்றும் தவெகவின் ஊதுகுழலான கூட்டணி கட்சியினர் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மேயர் ப்ரியா ராஜனை தொடர்ந்து அவமானம் செய்வதற்கு எதிராக இதுவரை எந்த கண்டனமும் தெரிவித்ததில்லை..
சமீப காலங்களில் மிக அதிகமாக விமர்சனங்கள், கிண்டல் கேலி மீம்ஸ், கேவலமான தனிநபர் விமர்சனங்கள், உருவத்தை எள்ளி நகையாடல்கள் என்று தனக்கு எதிரான அனைத்து அவதூறுகளையும் புறந்தள்ளி மக்கள் மத்தியில், சேவை களங்களில் தனித்துவமாக காட்சி தருகிறார்..
மேயராக பதவியேற்ற ஆரம்பத்தில் மாமன்ற கூட்டத்தில், பொதுக்கூட்ட மேடை நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் திணறிய ப்ரியா ராஜன் தற்போது சரளமாக பேசுவதற்கு பழகிவிட்டார்..
அவருடைய பேச்சின் போது வார்த்தைகளுடன் கூடவே வரும் So, But, Suppose என்ற ஆங்கில சொற்கள் கலந்த பயன்பாட்டிற்காகவே தனியாக கிண்டலடிக்கப்பட்டவர்..
ஆனாலும் எதையும் கண்டு கொள்ளாமல் திமுக தலைமை தன்னிடம் ஒப்படைத்த சென்னை மாநகர மேயர் பொறுப்பின் மாண்பை இதுவரை காத்து வருகிறார்…
பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களை எதிர்கொள்ள திராணியின்றி ஆட்சியாளர்கள், முழுநேர அரசியல்வாதிகளே ஓடி ஒளியும் நிலையில் ப்ரியா ராஜன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தைரியமாக நின்று பதில் சொல்பவர்.. ஆரம்பத்தில் மாநகராட்சி ஆணையர், திமுக ஆட்சியில் மூத்த அமைச்சர்கள் பதிலளித்த நிலையில் தற்போது எதிர்க் கட்சி ஊடகங்கள், சங் பரிவாரங்களின் ஊடகங்கள், திமுகவை குறை சொல்லி மட்டுமே எழுதும் இணைய ஊடகங்கள் உட்பட யார் எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும் பதிலளிக்கும் வகையில் திறமையை வளர்த்துள்ளார்.
அண்மையில் சென்னையில் பெய்த பெருமழை நாளில் இரவு பகலாக மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்களுடன் களத்தில் நின்று மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தார். திமுக ஆட்சியில் சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 4000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் பணிகள் பூர்த்தியடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் மழைநீர் முழுவதும் தேங்காமல் விரைந்து வடிந்து செல்லும் வகையில் திட்டங்கள் பயன்பெற துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..
நாலாயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் எங்கே என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதிலாக திமுக ஆட்சியில் நடைபெற்ற வடிகால் பணிகள் 75சதவீதம் பூர்த்தியானதால் தண்ணீர் விரைவாக வடிந்து சென்றது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல் ஊடகங்களில் வெளியாகி உண்மை வெளிச்சத்துக்கு வந்தது..
மழை நின்று, அதிகளவில் தேங்கிய தண்ணீர் வடிந்த பிறகு மூன்று நாள்கள் கழித்து வந்து குறை சொல்பவர்கள் ஒன்றியத்தில் கடந்த நான்கு ஆண்டு களாக ஒவ்வொரு முறை அதிகளவு மழை பொழியும் நாட்களில் பாதிக் கப்பட்ட பகுதிகளுக்கு தனது உடல் நிலையை கூட கவலைப்படாமல் மழைகோட் அணிந்து நேரடியாக சென்று தேவையான பொருட்கள், உணவு, தண்ணீர் பாட்டில் உட்பட விநியோகிக்க எடுத்துக்கொண்ட மக்கள் நலம் பயக்கும் மேயரின் முயற்சிகள் விமர்சனங்களை துளியும் பொருட்படுத்தாமல் மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்…
சென்னை மேயர் ப்ரியா ராஜன்
தகவல்: தகடூர் தமிழ்ச்செல்வி
