பாரிஸ், அக். 24- உலகில் முதல்முறையாக சமோண்டா வைரஸ் மனிதர்களுக்கு பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு, குதிரைகளை மட்டுமே பாதித்து வந்த சமோண்டா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. பிரான்சில் மனிதர் ஒருவருக்கு பரவி உயிரிழந்ததை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபர் ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்ணி மூலம் விலங்கு களுக்கு பரவக்கூடிய வைரஸ் முதல்முறையாக மனிதர்களுக்கு பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் இறந்த நபர், சமோண்டா வைரஸ் விலங்குகள் மத்தி யில் பரவலாக இருந்த பகுதியில் வசித்து வந்தார். பிரான்சில் உயிரிழந்த மருத்துவ பயனாளிக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு போது, அவரது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கியுள்ளது. இதனால் மூளையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டது. கடுமையான தலைவலி, மனக் குழப்பம் மற்றும் பக்கவாதம் போன்ற நரபியல் நரம்பியல் குறைபாடுகள் ஏற்பட்டன. கடைசியாக, நரம்பு மண் டலம் செயல் இழந்ததன் காரணமாகவே அந்த மருத்துவ பயனாளி உயிரி ழந்தார்.
தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் பிரான் சிடம் வைரஸ் தொற்று பற்றிய தகவல்களை கோரியுள்ளது என நிறுவன தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
