சீன ராணுவத்துடன் மோதல் பிரதமர் மோடி மறைப்பது ஏன்? காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 24- இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை நிறுவப்பட்டு 65ஆம் நிறுவன நாள் இன்று (24.10.2026) கொண்டா டப்பட இருக்கிறது. இதை யொட்டி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள இந்தோ-திபெத் திய எல்லை காவல் படை தளத்தில் விழா நடை பெற்றது.

இதில் எல்லை காவல் படை தளபதி சத்ருஜீத் சிங் கபூர் உரையாற்றும் போது, “இந்தியாவின் மிகப்பெரிய எதிரி சீனா. சீனாவை எதிர்கொள்ள, பாரம்பரிய போர் முறைகள் போதுமானதாக இல்லை. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் பல இடங்களில் சீன படைகளுடனான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதல் களை தொடர்ந்து சவுர்யா கமாண்டோக்கள் என்ற புதிய போர் பிரிவை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கி உள்ளது” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலை தளத்தில் கூறிய தாவது:-அருணாசலபிரதேசத்தில் உள்ள இந்திய நகரங் களுக்கு சீனா தொடர்ந்து மறுபெயரிட்டு வருகிறது. மேலும் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச் சுறுத்தலாக இருக்கும் 60 ஆயிரம் மெகாவாட் அணையை கட்டி வருகிறது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த பிறகு, எல்லைக்குள் எந்த வாகனமும் நுழையவில்லை, யாரும் நுழையவில்லை, எந்த பகுதியும் சீனாவின் வசத்தில் இல்லை என்று கூறி, சீனாவுக்கு பிரதமர் வழங்கிய நற்சான்றி தழுக்காக இந்தியா விலை கொடுத்து கொண்டிருக் கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *