சென்னை, அக்.24 தமிழ்நாடு அரசின் இணைய தளம், புதுப்பிக்கப்படாமல் (‘அப்டேட்’ செய்யா மல்) இயங்குவதால், பார்வையிடும் பொது மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர்.
தமிழ்நாடு அரசுக்கு, tn.gov.in என்ற இணையதளம் உள்ளது. தேசிய தகவலியல் மய்யம் வாயிலாக, இந்த இணையதளம் பராமரிக்கப்படுகிறது. அமைச்சரவை, அரசு துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
சட்டப்பேரவையில் அரசின் பட்ஜெட் அறிவிப்புகள், கொள்கை விளக்கக் குறிப்புகள், துறை வாரியாக அமைச்சர்களின் அறிவிப்புகள் உள்ளிட்டவையும் இடம்பெற்று இருக்கும். இது மட்டுமின்றி, நாள்தோறும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் தொடர்பான செய்திகள், ஒளிப்படங்களும் பதிவேற்றம் செய்யப்படும். அரசாணைகளும் பதிவேற்றம் செய்யப்படும். இதைப் பார்த்து, அரசின் செயல்பாடுகளை பலரும் தெரிந்து கொள்வர். திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததற்கான ஆதாரமாக அவை இருக்கும். ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, தமிழ்நாடு அரசின் இணையதளம் முறையாக இயங்கவில்லை. பல தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. வேளாண் துறை செயலாளராக இருந்த சங்கர் மாற்றப்பட்டு, பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், வேளாண் துறை செயலாளராக அவர் பணியில் இருப்பதாக, இணையதளத்தில் உள்ளது.
பல்வேறு வாரியங்கள், தீர்ப்பாயம், ஆணை யம் உள்ளிட்டவற்றிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்த தகவல்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை.
பல தகவல்கள் ரகசியமாகவே கையா ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறியபடி, அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இல்லாததால், இணையதளத்தை பார்வையிடும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு தலை மையின் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால், தொடர்புடைய துறைகளில் இருந்து அரசாணை குறித்த விவரங்கள், முறையாக தேசிய தகவலியல் மய்யத்திற்கு அனுப்பப்படுவதில்லை என, இதற்குக் காரணம் கூறப்படுகிறது.
