துர்கா பூஜை கொண்டாட்டங்களில் மதச் சோதனை? பதற்றத்தை தூண்டும் மேற்குவங்க முதலமைச்சர்

1 Min Read
- Advertisement -

மதத்தின் பெயரில் சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும் முயற்சிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் பேட்டியே சாட்சியாகும்.

கொல்கத்தா ஹூக்ளி ஆற்றில் துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் நிகழ்வில் சிலையைக் கொண்டுவருபவர்களின் மதப்பற்றை சோதனை செய்யவேண்டுமென்றும்  ஸநாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே சிலைகளைத் தொட வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள உத்தரவு போன்ற பேச்சுக்கள், மத நல்லிணக்கத்திற்குச் சம்மட்டியடி கொடுப்பதாகவே அமைகின்றன.

வழிபாடுகளும் திருவிழாக்களும் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்போடும், மனிதநேயத்தோடும் கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், அவற்றை ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஏகபோக உரிமையாக்க முயல்வதும், அதில் அரசியல் லாபம் காணத் துடிப்பதும் கண்டனத்திற்குரியது. கடந்த சோர்பாகன் பூஜை பந்தல் விபத்தில் 19 அப்பாவிகள் உயிரிழந்த துயரச் நிகழ்வில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய நேரத்தில், மதத்தின் பெயரால் காவல்துறை மூலமாக அடையாளச் சோதனைகளைக் கோருவது மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தையே உருவாக்கும்.

ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டு, ஒற்றுமையின் அடையாளமாக இருக்க வேண்டிய விழாக்களில் மதவாத மேடைகளாக மாற்றும் இத்தகைய குறுகிய அரசியல் போக்குகள் சமூகத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *