கோயில் நிர்வாகத்தினை மீண்டும் பெற தேசத்தை அடகுவைத்த பார்ப்பனர்கள்: ஒடிசா வீழ்ச்சியின் சரித்திரம்!-பாணன்

6 Min Read
- Advertisement -

இந்திய வரலாற்றில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான எழுச்சிகளும், வீரஞ்செறிந்தப் போர்களும் எவ்வளவோ பேசப்பட்டாலும், அதே காலக்கட்டத்தில் நிகழ்ந்த அதிகாரப் பதுக்கல்களும், சுயநலச் சமரசங்களும் வரலாற்றின் இருண்ட பக்கங்களாகவே தொடர்கின்றன.

பூணூல் புத்தி

1803 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஒடிசா  மீது படையெடுத்து அதைக் கைப்பற்றிய போது, அங்குள்ள பார்ப்பனர்கள் நடந்துகொண்ட விதம்,   அவர்களின் பூணூல் புத்தியைக் காட்டியுள்ளது

மனு பிள்ளை  தனது “கன்ஸ், காட்ஸ், மிஸினரி” (Guns, Gods, and Missionaries) என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உண்மை நிகழ்வு, ஒட்டுமொத்தப் ஒடிசாவும் பிரிட்டிஷாரிடம் வீழ்ந்த போது பார்ப்பனக் கும்பல் எப்படி தங்களுக்கு மட்டும் நன்மைதரும் விதமாக ஆங்கிலேயர்களுக்கு விதவிதமான சேவைகள்? செய்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

வங்காளத்தையும், சென்னை மாகாணத்தையும் (மதாராஸ்)இணைக்கும் கடல் மற்றும் நிலப் பாதைகளைக் கட்டுப்படுத்த ஒடிசாவைக் கைப்பற்றுவது பிரிட்டிஷாருக்கு அவசியமானதாக இருந்தது.

இங்கு மிகவும் முக்கியமாக பார்க்கவேண்டியது அப்போது ஒரிய மொழி பேசும் கீழ்மத்திய நிலப்பகுதி மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது.

சித்பவன் பார்ப்பனர்கள் தூண்டுதல்

நாக்பூர் பார்ப்பனர்களுக்கு பாதம் தாங்கியாக இருந்த போஸ்லே வம்ச மன்னர்கள் இன்றைய மத்தியப் பிரதேசம், தெற்கு குஜராத் மற்றும் வட கருநாடகாவில் உள்ள பல கோயில்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சித்பவன் பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவிட்டனர். இந்தச் சித்பவன் பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில் சிருங்கேரி மடத்தையும் கைப்பற்றி சித்பவன் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப் போர் தொடுத்தார்கள்.

மராட்டிய மன்னன் இரண்டாம் சாஹூ தனது தளபதி பரசுராம் பாவு என்பவரின் தலைமையில் படைகளை அனுப்புகிறார் அந்தப்படை விஜயதசமி நாளில் 1791-ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

மைசூர் பகுதியை ஆண்டு திப்பு சுல்தானின் படையினர் விஜய தசமி கொண்டாட்டத்தில் மூழ்கினர். சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியான சச்சிதானந்த பாரதியின் மேற்பார்வையில் அப்பகுதி நிர்வாகம் இருந்தது.

கொண்டாட்டத்தில் மூழ்கினர்

சிருங்கேரி பாதுகாவலர்களும், அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த பாதுகாப்புப் படையினரும் (கூலிக்காக வேலை செய்யும் போர் வீர்ர்கள். இதில் போர்ச்சுகீசியரும், முகமதியர்களும், தெலுங்கர்களும் இருந்தனர்.) முழுமையான விஜயதசமி கொண்டாட்டத்தில் இருந்த போது திட்டமிட்டுத் திடீரென மராட்டியர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். மடத்தின் பல விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தனர். தலைமை நிர்வாகியும், மடத்தின் தலைவருமான சச்சிதானந்த பாரதி பாதுகாப்போடு மைசூருக்குச் சென்று ஒளிந்துகொண்டார்.

இருப்பினும் திப்பு சுல்தானை வெல்ல முடியாமல் மீண்டும் மராட்டியப் பகுதிகளுக்கே மராட்டியர்கள் திரும்பி விட்டனர்.

தெற்கே பலமாக இருந்த திப்பு சுல்தானை எதிர்த்து மேலும் முன்னேறிச் செல்ல இயலாததால் பின்வாங்கி விட்டனர்.

இருப்பினும் சித்பவன் பார்ப்பனர்களுக்கு ஒடிசா ஜெகன்னாதர் கோயில் செல்வத்தின் மீது கண் இருந்தது.

ஆகையால் 1790ஆம் ஆண்டு மராட்டியர்கள் ஒடிசாவைக் கைப்பற்றி ஜெகன்னாதர் கோயில் நிர்வாகத்தை சித்பவன் பார்பனர்களிடம் கொடுத்தனர்.

ஏற்கெனவே ஜெகன்னாதர் கோயிலை நிர்வகித்த ஒடிசா பார்ப்பனர்கள் ஆங்கிலேயரின் நிர்வாகம் இருந்த கட்டாக் (இன்றைய டாடா நகர்) பகுதிக்குச் சென்று அங்கே ஜெகன்னாதர் கோயில் கட்டி ரத ஊர்வலம் நடத்தி வந்தனர்.

இருப்பினும் அவர்களுக்கு ஜெகன்னாதர் கோயில் வருமானம் போன்று எதுவும் வரவில்லை. மேலும் ஜெகன்னாதர் கோயில் செல்வம் என்பதே கணக்கில் அடங்காமல் பெருகி இருந்தது.

பார்ப்பனர்களின் திட்டம்

கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், மதராஸ் மற்றும் பெங்கால் பகுதிகளை எளிதில் இணைப்பதற்கும் ஒடிசா மிகவும் முக்கியமான நிலப்பகுதியாக அமைந்திருந்தது.

இதனைச் சாதகமாக மாற்ற ஒடிசா பார்ப்பனர்கள் ஆங்கிலேய தளபதியிடம் திட்டம் ஒன்றை வைத்தனர். அப்போது பெங்கால் ஆளுநராகவும், லெப்டினெண்ட் கர்னலாகவும் இருந்த ஹேர்கோட் என்பவரிடம் ஒடிசாவைத் தாக்குங்கள் என்றார்கள்.

அதற்கான திட்டமும் தீட்டிக் கொடுத்தார்கள். ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஒரு முடிவை எடுத்தாலும் பிரிட்டிஷ் ராணியின் அனுமதி வேண்டும் என்று சாக்குபோக்கு கூறிக்கொண்டு இருந்தனர். இதற்குக் காரணங்களில் தங்களின் சுய விருப்பங்களும் அதில் ஒன்றாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியினர் தமது ஆளுமையின் போது சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தது கிடையாது. மேலும் கிழக்கிந்திய கம்பெனியார்களில் முக்கியமானவர்கள் கம்பெனி லாபத்தோடு தங்களுடைய சொந்த விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தனர்.

மண்ணாசை – பெண்ணாசை

கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத் தலைமையில் உள்ள இந்த மண்ணாசைப் பெண்ணாசையை பார்ப்பனர்கள் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஒடிசாவிலும் அதுதான் நடந்தது. ஆனால், ஒடிசாவைக் கைப்பற்றும் முடிவை எடுக்க தாமதப் படுத்திக்கொண்டே சென்றனர். இருப்பினும் பல விதங்களில் அவர்களைச் சரிக்கட்டி ஒருவழியாக ஒடிசா மீது தாக்குதலைத் தொடங்க ஆங்கிலேயர்களை ஒப்புக்கொள்ள வைத்தனர். கட்டாக் மற்றும் டில்லியில் இருந்து  ஒடிசாவை நோக்கி, லெப்டினெண்ட் கர்னல் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் நகர்ந்தன. 1803ஆம் ஆண்டு மராட்டியப் படையினர் விஜயதசமி விழாவில் மூழ்கி இருந்த போது பூரி (Puri) மற்றும் கட்டாக் பகுதிகளைத் தாக்கினர்.

400 வீரர்கள் உயிரிழந்தனர்

பரங்கிப் படைகள் ஒடிசாவைக் கைப்பற்றி முன்னேறியபோது, ஒடிசாவில் இருந்த  பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயத் தளபதிகளை எதிர்கொண்டு, ‘ஆரத்தி’ எடுத்து வரவேற்றனர்.

பூரி பகுதியில் நடந்த மோதலில் ஒடிசா வீரர்கள் சுமார் 400 பேர் வரை இறந்துள்ளனர். சில நூறு பேர்கள் காயமடைந்தனர்.  பூரி பகுதி முழுவதும் கடுமையான மோதல் நிகழ்ந்தது.

ஆங்கிலேயர்கள் பூரியின் பல பகுதிகளை நோக்கி எப்படிச் சென்றடைவது என ஒடிசா பார்ப்பனர்கள் திட்டம் தீட்டியும் கொடுத்தனர்.

ஒட்டுமொத்த ஒடியப் பகுதிகளும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமையாவதைப் பற்றியோ, ஆட்சி வங்காள நிர்வாகத்தின் கீழ் மாறுவதைப் பற்றியோ  பார்ப்பனர்கள் கவலைப்படவில்லை. “ஊர் எக்கேடு கெட்டால் என்ன, பூரி ஜெகன்னாதர் கோயில் நிர்வாகம் எங்கள் கையில் வந்தால் போதும் என்று இருந்தனர்.

பூரி கெகன்னாதர் கோவிலின் புகழ் மற்றும் அதன் பிரம்மாண்டமான வருமானம் ஒடிசாவின் அப்போதைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது. கோவிலின் உண்டியல் வசூல் மற்றும் காணிக்கைகள் மூலம் கோடிக்கணக்கான செல்வம் குவிந்தது.

பார்ப்பனர்கள் போட்ட ஒப்பந்தம்

மோதலுக்கு முன்பே வங்கத்திற்கு ஓடிச்சென்ற ஒடியாப் பார்ப்பனர்கள் ஆங்கிலேயரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.

“ஜெகன்னாதர் கோவிலின் நிர்வாகமும், உண்டியல் வருமானமும் தங்களுக்கு வேண்டும், ஆங்கிலேயப் படைகள் பாதுகாப்பைத் தங்களுக்கு தர வேண்டும். இதற்கு மாற்றாக ஒடிசாவின் முழு நிர்வாகத்தையும் ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்று ஒப்பந்தமிட்டனர்.

கோயில் வருமானத்தில் சிறு பகுதியை கோயிலைப் பாதுகாக்கும் பிரிட்டிஷ் படைவீரர்களுக்குத் தரவும் முன்வந்தனர். வேறு சில சலுகைகளும் தந்தனர்.

ஆங்கிலேயர்களும் இந்தச் சலுகையை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். உள்ளூர் மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி ஒடிசாவில் காலூன்ற இது அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.

ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைந்தது

இந்த நிகழ்வு காலனி ஆதிக்கவாதிகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. இந்தியாவில் ஆட்சியை நிலைநிறுத்த பார்ப்பனர்களைக் கையில் போட்டுக்கொள்வது எளிது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

ஜெகன்னாதர் கோயில் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் மூலம், ஆங்கிலேயர்கள் ஒடிசா மக்களின் மறைமுக எஜமானர்களாக மாறினர். பார்ப்பனர்களின் பேராசையும், சமரசமும் ஆங்கிலேயர்களுக்கு ஒடிசாவில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.

மனு பிள்ளையின் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த நிகழ்வு, இந்திய வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் அடிமட்ட மக்களின் உரிமைகளும், ஒட்டுமொத்த இந்தியத் தீபகற்பமும் ஆதிக்க சக்திகளிடம் அடகு வைக்கப்பட்டதற்கான சாட்சியமாக அமைகிறது. இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தால் இம்மண்ணில் அந்நியர் வருவதைத் தடுக்கும் உணர்வு தானகவே எழுந்திருக்கும். ஆனால் அவர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பல கட்டங்களாக கைபர் போலன் ஹிந்துகுஷ் கணவாய் வழியாக இங்கே வந்தவர்கள்தானே!

தங்களின் தனிப்பட்ட சுகபோக சல்லாப வாழ்க்கைக்காகவும், உண்டியல் வருமானத்திற்காகவும் அந்நிய சக்திகளுடன் பார்ப்பனர்கள் கைகோர்த்ததன் மூலம் இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு மோசமான அத்தியாயத்தை உருவக்கி விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *